நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையொட்டி மக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் பண்டிகையை கொண்டாடுவர். மேலும், உறவினர்களின் இல்லங்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுவர்.
அந்தவகையில் இன்று அதிகாலை முதலே மக்கள் பட்டாசு வெடித்தும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இறைச்சி கடைகளில் கூட்டம்
தீபாவளியையொட்டி அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பட்டாசு, இனிப்புகளுக்கு அடுத்தபடியாக இறைச்சி எடுத்து சமைத்து உண்பது முக்கியத்துவம் பெறுவதால், இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே கூட்டம் அதிகரித்திருந்தது.
பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

