– நாட்டில் எப்பொழுதும் கூட்டணி அரசுகளே இருந்து வந்துள்ளன
– SLPP இந்த அரசின் மிகவும் சக்திவாய்ந்த பங்குதாரர்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, இந்த அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த பங்குதாரர் என்பதுடன் இந்த தேர்தலில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பலமான சக்தி கட்டியெழுப்பப்படும் என்றும் நாட்டில் எப்பொழுதும் கூட்டணி அரசாங்கங்களே இருந்து வந்துள்ளதாகவும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
“நாட்டின் எதிர்காலமும் எமது பொறுப்பும்” என்ற தலைப்பில் நேற்று முன்தினம் (17) மஹஜன எக்சத் பெரமுனவின் (மக்கள் ஐக்கிய முன்னணி) கம்பஹா மாவட்ட சபையின் ஏற்பாட்டில் கிரில்லவலவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

