Last Updated:
பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார். 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூஸா உள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைகள் குழு எனப்படும் படையில் பரா கமாண்டோவாக பணியாற்றியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பயங்கரवादத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கோரியுள்ள ராகுல்காந்தி, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன. தூத்பத்ரி, தவ்சி மைதான், ராஜ்போரா, ராம்போரா உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்ட 48 சுற்றுலா இடங்களில் முக்கியமானவையாகும்.
மூடப்பட்டுள்ள சுற்றுலா மையங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 48 தலங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
Delhi,Delhi,Delhi
April 29, 2025 2:26 PM IST


