• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: வக்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம் | Budget sitting resumes today amid delimitation, three-language debates

GenevaTimes by GenevaTimes
March 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: வக்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம் | Budget sitting resumes today amid delimitation, three-language debates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்​கு​கிறது. வக்பு வாரிய திருத்​தம் உள்​ளிட்ட மசோ​தாக்​களை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. மும்​மொழி கொள்​கை, மக்​களவை தொகுதி மறு​வரையறை, மணிப்​பூர் கலவரம் உட்பட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்​ர​வரி 13-ம் தேதி வரை நடை​பெற்​றது. முதல் நாளில் நாடாளு​மன்ற கூட்​டுக் கூட்​டத்​தில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு உரை​யாற்​றி​னார். பிப்​ர​வரி 1-ம் தேதி மத்​திய பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தாக்​கல் செய்​தார்.

குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதத்​தில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி – எதிர்க்கட்சி எம்​.பி.க்​கள் இடையே கடும் வாக்​கு​வாதம் நடந்​தது. வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்​பாக​வும் நாடாளு​மன்​றத்​தில் கடும் அமளி நில​வியது.

இந்த சூழலில். பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்​கு​கிறது. இந்த தொடரில் வக்பு வாரிய திருத்த மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. இந்த மசோ​தாவுக்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஆரம்​பம் முதலே கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

இந்த கூட்​டத் தொடரின்​போது, குடியேற்​றம் – வெளி​நாட்​டினர் சட்ட மசோ​தா, வங்கி திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோ​தா, கடலோர கப்​பல் போக்​கு​வரத்து மசோதா ஆகிய​வற்றை நிறைவேற்​ற​வும் மத்​திய அரசு தீவிர முயற்சி மேற்​கொள்​ளும் என்று தெரிகிறது. இதற்​கிடையே, மும்​மொழி கொள்​கை, மக்​களவை தொகுதி மறு​வரையறை ஆகிய​வற்​றுக்கு தமிழக அரசும், பல்​வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இது நாடாளு​மன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்​கும் என்று தெரி​கிறது. மணிப்​பூரில் மீண்​டும் கலவரம் ஏற்​பட்ட நிலை​யில், இதுபற்றி நாடாளு​மன்​றத்​தில் காங்​கிரஸ் போர்க்​கொடி உயர்த்​தும் என்று கூறப்படுகிறது.

வெவ்​வேறு மாநிலங்​களில் வாக்​காளர்​களுக்கு ஒரே வாக்​காளர் அடை​யாள அட்டை எண் வழங்​கப்​பட்ட விவ​காரத்தை திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி தீவிர​மாக எழுப்பி வரு​கிறது. இந்த விவ​காரத்தை நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எழுப்​புவோம் என்று அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் டெரிக் ஓ பிரையன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா உள்ளிட்ட நாடு​கள் மீது வரும் ஏப்​ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். தனது அழுத்​தம் காரண​மாக அமெரிக்க பொருட்​கள் மீதான வரியை குறைக்க இந்​திய அரசு முன்​வந்​திருக்​கிறது என்​றும் அவர் கூறி​யுள்​ளார். அமெரிக்க அரசின் வரி விதிப்பு விவ​காரம் குறித்து காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்​தில் பிரச்​சினையை எழுப்ப திட்​ட​மிட்​டுள்​ளன. அமெரிக்​கா​வில் இருந்து வெளி​யேற்​றப்​படும் இந்​தி​யர்​கள், கைவிலங்​கிட்டு அழைத்து வரப்​பட்​டது குறித்​தும் எதிர்க்​கட்​சிகள் குரல் எழுப்​பும் என்று தெரி​கிறது.

மத்​திய பட்​ஜெட்​டில் போதிய நிதி ஒதுக்​கப்​பட​வில்லை என்று தமிழகம், தெலங்​கானா உள்​ளிட்ட மாநிலங்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றன. இதுகுறித்​தும் எதிர்க்​கட்​சிகள் பிரச்​சினை எழுப்ப திட்​ட​மிட்​டுள்​ளன. இன்று தொடங்​கும் 2-ம் கட்ட கூட்​டத் தொடர் ஏப்​ரல் 4-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்த தொடரை சுமுக​மாக நடத்த மத்​திய அரசு தீவிர முயற்சி மேற்​கொண்டு வரும் நிலை​யில், பல்​வேறு பிரச்​சினை​களை எழுப்​ப எதிர்க்​கட்​சிகள் தயா​ராகி வரு​கின்​றன.

மணிப்​பூர் மாநிலத்​தில் கடந்த பிப்​ர​வரி 13-ம் தேதி குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. இதற்கு நாடாளு​மன்​றத்​தில் ஒப்​புதல் கோரி, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தீர்​மானம் கொண்டு வரு​வார். மணிப்​பூருக்​கான பட்​ஜெட்டை மக்​களவை​யில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்​ தாக்​கல்​ செய்​வார்​ என்​று மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.



Read More

Previous Post

புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் முழு பட்டியல்

Next Post

டபிள்யூபிஎல் 2025: மும்பை இந்தின்யன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்.. மேட்ச் நேரம், இடம், மேலும் விவரம் உள்ளே

Next Post
டபிள்யூபிஎல் 2025: மும்பை இந்தின்யன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்.. மேட்ச் நேரம், இடம், மேலும் விவரம் உள்ளே

டபிள்யூபிஎல் 2025: மும்பை இந்தின்யன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்.. மேட்ச் நேரம், இடம், மேலும் விவரம் உள்ளே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin