Last Updated:
டெல்லி பள்ளிகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
டெல்லியில் உள்ள ஒன்பது பள்ளிகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி காவல்துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை 8.30 மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், ”டெல்லி காலிஸ்தானாக மாறும் – பிப். 13, பகல் 1.11 மணிக்கு நாடாளுமன்றத்துக்குள் குண்டுவெடிக்கும்” என்று அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு டெல்லி காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திலும் காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Feb 09, 2026 10:29 AM IST


