• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள்

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மூதூர்

இதன்படி மூதூர் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (16)
நீதிமன்றத்திற்கு முன்னாள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டனர்.

சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி
உயிரிழந்தமையை கண்டித்து கையில் கருத்தப்பட்டி அணிந்தும்,கடமையில் ஈடுபடாதும்
எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மூதூர் நீதீமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி -புஹாரிஸ்

வவுனியா

கொழும்பில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை – வவுனியாவிலும் இன்று நீதிமன்ற
நடவடிக்கைகள் புறக்கணிப்பு
வவுனியா

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய
ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இதன்படி நீதிமன்ற நடவடிக்கைகளை
புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் சட்டத்தரிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி – கபில் 

கல்முனை 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில்
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும்
சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை
நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று
காலை 9.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பின்னர்
எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டி அணிந்த சட்டத்தரணிகள்,
“சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுக”, “சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குக”
உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளை
ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும்
ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சட்டத்தரணிகள் தங்களது
தொழில்பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட
வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி – உமர்

திருகோணமலை 

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி
சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்ற
நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று
தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஆதரவாக இன்று திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றம் எதிர்ப்பு
தெரிவித்து சட்ட தரணிகள் இன்றை தினம் தமது கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.

இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்திருந்தன இதில்
சட்டத்தரணிகள் கருப்புக் கொடியை ஏற்றி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து
விலகிருந்தனர்.

விசாரணைக்கு வந்திருந்த வழக்குகளில் சட்டத்தரணிகள் முன்னிலை ஆகாத காரணத்தால்
அனைத்து வழக்குகளையும் வேறு திகதி வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணைகள்
பிற்போடப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி – தொம்சன்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஷா ஆலாமில் பலத்த மழை மற்றும் காற்று: கார் மீது விழுந்த மரம் – இரு பெண்கள் காயம்! | Makkal Osai

Next Post

“சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கூடாது..” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆதரவு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In