Last Updated:
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவை பெரும் அதிர்வில் ஆழ்த்தும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் 2,000-க்கும் மேற்பட்ட மூத்த நாசா ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக புதிய அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
நாசா ஊழியர்கள் 2,000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக பொலிட்டிகோ வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கைகள், வெள்ளை மாளிகையின் விண்வெளிக் கொள்கையின் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவை பெரும் அதிர்வில் ஆழ்த்தும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் 2,000-க்கும் மேற்பட்ட மூத்த நாசா ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக புதிய அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அறிவியல் மற்றும் மனித விண்வெளிப் பிரிவுகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட, பல துறைகளில் அனுபவமிக்க ஊழியர்கள் இந்த நீக்கப்படும் பட்டியலில் இருப்பது, அமெரிக்காவின் விண்வெளிக் கொள்கையிலும், ஆராய்ச்சி திசையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், நாசாவிலுள்ள குறைந்தது 2,145 மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிட்டிகோ வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதில் அறிவியல் மற்றும் மனித விண்வெளிப் பயணப் பிரிவுகளிலேயே 1,818 பேர் பணியாற்றி வருகிறார்கள். மற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் மேலாண்மை சார்ந்த மற்ற ஆதரவுப் பணிகளில் இருக்கிறார்கள்.
GS-13 முதல் GS-15 வரையிலான ஊழியர்களைக் குறைப்பதற்காக திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைகள், வெள்ளை மாளிகையின் விண்வெளிக் கொள்கையின் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு முன்கூட்டிய ஓய்வு, இழப்பீடு, ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா போன்ற அம்சங்கள் வழங்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கட்டுப்பாடுகளுக்குள் செயல்பட நாசா உறுதிபூண்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த திட்டம் 2026ஆம் ஆண்டுக்கான வெள்ளை மாளிகை பட்ஜெட்டின் 25% நிதிக்குறைப்பு காரணமாகவே உருவானது எனவும், மொத்தமாக 5,000 பணியிடங்கள் அழிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1960-களுக்குப் பிறகு நாசாவுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ஜெட்டுகளில் ஒன்றாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப், நாசாவின் நிர்வாகியாக போக்குவரத்து செயலாளரான சீன் டஃபியை நியமித்துள்ளார். இதன் மூலம், நாசாவின் தலைமையில் தனியார் நிறுவனங்கள் விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, எலான் மஸ்க் தனது கூட்டாளியான ஜாரெட் ஐசாக்மேன் இந்த பதவியில் நியமிக்கப்படுவார் என நம்பியிருந்த நிலையில், இது எலான் மஸ்க்கிற்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
July 12, 2025 12:30 PM IST
நாசா ஊழியர்கள் 2,000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டம்… அதிர்ச்சியூட்டும் அறிக்கை…