பிரிவினை கேட்க வைக்கிறீர்கள்
தனித்தமிழ்நாடு பெரியார் கேட்ட காரணமே சாதி ஒழிந்த தனித்தமிழ்நாடு வேண்டும் என்றுதான். பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சாதி ஒழிப்பிலே ஒரு பொது கருத்து உண்டு. ஆனால் மொழி உணர்வில் வெவ்வேறு கருத்து உண்டு. இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு இந்தி – உருது மொழிகளை இணைத்து இந்துஸ்தானி மொழியை உருவாக்கலாம் என்று காந்தி சொன்னார். மேற்கு வங்காளத்தையும், கிழக்கு வங்காளத்தையும் பிரித்தது எது? மொழிதானே. மதம் சேர்க்காது, மொழிதான் சேர்க்கும். மொழியால் பிரிக்கிறோம் என்று நீங்கள் சொன்னால், நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. நீங்கள் தான் எங்களை பிரிவினையை கேட்க வைக்கிறீர்கள் என்று பொருள்.

