Last Updated:
போர் சூழலிலும் தாங்கள் இயல்பு நிலையில் இருப்பதாகவும் எதிரணிக்கு மறைமுகமாக சமிக்ஞை தெரிவித்துள்ளனர் ஈரான் மக்கள்.
போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானின் டெஹ்ரான் நகரில் நாட்டைப் பாதுகாக்கும் இயக்கத்துடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஒரு போதும் அடிபணியமாட்டோம் என சூளுரைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரானைக் காக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக குழுக்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அதில், ஜான்படா என்ற அமைப்பினர் டெஹ்ரானில் உள்ள இமாம் ஹோசைன் சதுக்கத்தில் 110 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
Peak Tehran energy: More than 1,000 couples to be married tonight in mass wedding ceremony amid escalating tensions with the US
Footage shows one of 100s of military jeeps, mounted with machine guns & covered in flowers, set to lead wedding caravan through Tehran’s main squares pic.twitter.com/xKzuDlUBsA— RT (@RT_com) May 18, 2026
இதன் மூலம், போர் சூழலிலும் தாங்கள் இயல்பு நிலையில் இருப்பதாகவும், கொண்டாட்ட மனநிலையில் மக்கள் உள்ளதாகவும் எதிரணிக்கு மறைமுகமாக சமிக்ஞை தெரிவித்துள்ளனர். அரசுக்கு ஆதரவளிக்கும் இது போன்ற தன்னார்வ அமைப்பினருக்கு ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


