• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நவீன தொழில்நுட்பத்தில் வருகிறது பான் 2.0 கார்டு | New PAN card and PAN 2.0 explained

GenevaTimes by GenevaTimes
December 10, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நவீன தொழில்நுட்பத்தில் வருகிறது பான் 2.0 கார்டு | New PAN card and PAN 2.0 explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்​வதற்கு மட்டும்​தான் என்ற நிலை மாறி​விட்​டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்​கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்​தமான பரிவர்த்​தனை​களுக்​கும், தங்கம், நிலம் வாங்​கு​வதற்​கும் பான் கார்டு கட்டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதனால்​தான் வருமான வரிதா​ரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்த​போ​தி​லும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்​கி​யுள்​ளனர்.

இந்நிலை​யில், பான் 2.0 திட்​டத்தை செயல்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பயனர்​களின் பயன்​பாட்டை மேம்​படுத்து​வதற்​கும் தொழில்​நுட்ப முன்னேற்​றங்​களுடன் இணைப்​ப​தற்​கும் வரிவசூல் தொடர் கண்காணிப்பு அமைப்​புக்​கும் இது உதவும். இதற்காக ரூ.1,300 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தியா​வில் பான் கடந்த 1972-ல் நிரந்தர கணக்கு எண் (PAN) அறிமுகப்​படுத்​தப்​பட்​டது. ஒரு தனித்து​வமான 10 இலக்க எண்ணைக் கொண்ட பான் கார்டு வரி செலுத்​துதல், வருமான வரிப்​பிடித்​தல்​/வரி செலுத்​துதல் (TDS/TCS) போன்ற தனிநபர் அல்லது நிறு​வனத்​தின் நிதி பரிவர்த்​தனைகளை இணைப்​ப​தில் முக்கிய பங்கு வகிக்​கிறது.

பான் 2.0 மைல்கல் திட்டம்: மேம்​பட்ட மின் ஆளுமை மூலம் வரிதா​ரர்​களின் பதிவை நவீனமய​மாக்கு​வதல், தடையற்ற டிஜிட்டல் அனுபவங்களை வழங்​குதல், நிர்​வகித்​தல், செயல்​முறையை மேம்படுத்​துதல் இதன் நோக்​க​மாகும். இத்திட்டம் பயனர்​களின் தேவையை ஒருங்​கிணைப்​ப​தில் கவனம் செலுத்து​கிறது.

புதிய குறி​யீடு அம்சம்: 2017-18 முதல் பான் கார்​டு​களிள் QR குறி​யீடு ஒரு பகுதியாக உள்ளது. பான் 2.0 இன் கீழ், இது பான் தரவுத்​தளத்​திலிருந்து சமீபத்திய தரவைக் காண்​பிக்​கும் டைனமிக் QR குறி​யீட்டுடன் மேம்​படுத்​தப்​படும். QR குறி​யீடு, பான் விவரங்​களைச் சரிபார்த்து, நம்பகத்​தன்​மையை உறுதிப்​படுத்து​கிறது. விவரங்​களைச் சரிபார்க்க பிரத்யேக QR ரீடர் பயன்​பாடு உள்ளது. ஸ்கேன் செய்​யும் போது, புகைப்​படம், கையொப்​பம், பெயர், பெற்​றோரின் பெயர்கள் மற்றும் பிறந்த தேதி ஆகிய​வற்​றைக் காட்டு​கிறது.

பழைய அட்டை மாற்ற வேண்​டுமா? – பழைய பான் கார்டு வைத்​திருப்​பவர்கள் கவலைப்​படத் தேவை​யில்லை. ஏற்கெனவே உள்ள பான் கார்டு வைத்​திருப்​பவர்கள் மேம்​படுத்​தப்​பட்ட அமைப்​பின் கீழ் புதிய பான் கார்​டுக்கு புதிதாக விண்​ணப்​பிக்கத் தேவை​யில்லை. தற்போதைய செல்​லுபடி​யாகும் பான் கார்​டுகள் வைத்​திருப்​பவர்​கள், புதுப்​பித்தல் அல்லது திருத்தம் கோரி, புதிய அட்டைக்கு விண்​ணப்​பிக்​கலாம். இதனால் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணை மாற்​றாமலேயே, பான் 2.0 இன் கீழ் QR குறி​யீட்​டைக் கொண்ட புதிய அட்டைக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

உலகத்​தரத்துக்கு இணையாக பான் 2.0: உலக நாடு​களில் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடு​களில் தனிநபர் அடையாள அட்டை என்ற சமூக பாது​காப்பு எண் (SSN), தனிப்​பட்ட வரி செலுத்து​வோர் எண்(UTR) போன்றவை அனைத்து விதமான காப்​பீடு, பணப்​பரிவர்த்​தனை​களுக்கும் பயன்​படுத்​தப்​படு​கிறது. இதன் மூலம், ஒரு தனிநபரின் அனைத்து விதமான நிதி, மற்றும் அது சார்ந்த பரிவர்த்​தனை​கள், வருமான வரி என அனைத்​தும் ஒருங்​கிணைக்​கப்​படு​கிறது.

அதேபோல், PAN 2.0 திட்டம் தடையற்ற டிஜிட்டல் செயல்​முறைகள் மற்றும் வலுவான தரவு பாது​காப்புடன் வரி செலுத்து​வோர் பதிவை மேம்​படுத்த உலகளாவிய தரநிலைகளுடன் செயல்​படுத்​தப்​படு​கிறது. இது தரம், பாது​காப்பு மற்றும் சேவை மேலாண்​மைக்கான முக்கிய ISO சான்​றிதழ்​களுக்கு இணங்​குவதை உறுதி செய்​கிறது. எளிமையான ஆன்லைன் செயல்​முறை​கள், குறைந்​த​பட்ச ஆவணங்கள் மற்றும் மையப்​படுத்​தப்​பட்ட தரவுத்​தளங்​கள், வலுவான பாது​காப்பு மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் மூலம் தரவைப் பாது​காக்​கும் அதே வேளை​யில் பயனர் அனுபவத்தை மேம்​படுத்து​வதன் மூலம் PAN/TAN பதிவை இந்தத் திட்டம் நெறிப்​படுத்து​கிறது.

பான் தொடர்பான சேவைகள் தற்போது மூன்று வெவ்​வேறு தளங்​களான இ-ஃபைலிங் போர்​டல், யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் மற்றும் புரோடீன் இ-அரசு போர்ட்​டலாக உள்ளன. ஆனால், பான் 2.0 திட்​டத்​தில், அனைத்து PAN/TAN தொடர்பான சேவை​களும் வருமான வரித் துறை​யின் ஒரே போர்ட்​டலில் ஒருங்​கிணைக்​கப்​படும். இத்தகைய சிறப்​பம்​சங்களை கொண்ட பான் 2.0 நடைமுறை​யில் செயல்​படுத்​தப்பட இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

சுமையா? வளர்ச்​சியா? – மக்கள் இந்த புதிய பான் அட்டையை பெறு​வதன் மூலம், பான் தொடர்பான அனைத்து சேவை​களும் மிக விரைவாக வரி செலுத்து​வோருக்​குக் கிடைக்​கும். டேட்டா சார்ந்த பிழைகள் அனைத்​தும் குறைக்​கப்​படும். தற்போதுள்ள பான் கார்​டு​தா​ரர்​களுக்கு இலவச​மாகவே அப்கிரேட் செய்​யப்​படும்.

உலகளாவிய சிறந்த நடைமுறை​களுக்கு ஏற்ப இந்தியா​வின் வரி முறையை நவீனமய​மாக்கி ஒருங்​கிணைப்​பதன் மூலம் வரி செலுத்து​வோர் மிக​வும் நெறிப்​படுத்​தப்​பட்ட மற்றும் ​திறமையான அனுபவத்தை பெறலாம். இந்த ​முன்​முயற்சி, சேவைகளை எளி​தாக்குவது மட்டுமல்​லாமல், தரவு பாது​காப்பு மற்றும் வெளிப்​படைத்​தன்​மையை உறு​தி​செய்து, சிறந்த வரி இணக்​கம் மற்றும் நிர்​வாகத்தை வளர்க்​கும்​ என நம்​பப்​படுகிறது.

– ஆடிட்டர் ஜி.கே.ஸ்ரீநிவாஸ்



Read More

Previous Post

டிராவிஸ் ஹெட்டுடன் வாக்குவாதம்.. ஐசிசி விதித்த ரூ.9 லட்சம் அபராதம்: சிராஜின் கூலான ரியாக்ஷன்

Next Post

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: டோக்கியோ ஆளுநர் அறிவிப்புக்கான காரணம் என்ன? | 4 days work in week reason for Tokyo Governor announcement

Next Post
வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: டோக்கியோ ஆளுநர் அறிவிப்புக்கான காரணம் என்ன? | 4 days work in week reason for Tokyo Governor announcement

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: டோக்கியோ ஆளுநர் அறிவிப்புக்கான காரணம் என்ன? | 4 days work in week reason for Tokyo Governor announcement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin