நவம்பர் 2024க்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, நவம்பரில் தீபாவளி, சத் பூஜை போன்ற பண்டிகைகள் மற்றும் வழக்கமான வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) உட்பட மொத்தம் 13 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
உங்களின் வங்கித் தேவைகளுக்காக நீங்கள் விடுமுறை தினங்களை தேர்வு செய்தால், ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க வங்கி விடுமுறை நாட்களை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமாகும். இந்த வங்கி விடுமுறைகள் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
வங்கி விடுமுறைகளின் பட்டியல் மாநிலத்தை பொறுத்து மாறுபடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கி விடுமுறை அட்டவணைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நவம்பர் 1: தீபாவளி அமாவாசை
நவம்பர் 2: தீபாவளி (பாலி பிரதிபதா)
நவம்பர் 3: ஞாயிறு
நவம்பர் 7: சாத்
நவம்பர் 8: சாத்
நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 10: ஞாயிறு
நவம்பர் 12: எகாஸ்-பாக்வால்
நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி
நவம்பர் 17: ஞாயிறு
நவம்பர் 18: கனகதாச ஜெயந்தி
நவம்பர் 23: செங் குட்ஸ்னெம், நான்காவது சனிக்கிழமை
நவம்பர் 24: ஞாயிறு
மாநில வாரியான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
வங்கிகளுக்கான விடுமுறை பட்டியல் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறை நாட்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
அகர்தலா: நவம்பர் 1
அகமதாபாத்: நவம்பர் 2
ஐஸ்வால்: நவம்பர் 15
பேலாபூர்: நவம்பர் 1, 2, 15
பெங்களூரு: நவம்பர் 1, 2, 18
போபால்: நவம்பர் 15
புவனேஷ்வர்: நவம்பர் 15
சண்டிகர்: நவம்பர் 15
டேராடூன்: நவம்பர் 1, 2, 12, 15
கேங்டாக்: நவம்பர் 1, 2
ஹைதராபாத்: நவம்பர் 15
இம்பால்: நவம்பர் 1
இட்டாநகர்: நவம்பர் 15
ஜெய்ப்பூர்: நவம்பர் 2, 15
ஜம்மு: நவம்பர் 1, 15
கான்பூர்: நவம்பர் 2, 15
கோஹிமா: நவம்பர் 15
கொல்கத்தா: நவம்பர் 7, 15
லக்னோ: நவம்பர் 2, 15
மும்பை: நவம்பர் 1, 2, 15
நாக்பூர்: நவம்பர் 1, 2, 15
டெல்லி: நவம்பர் 15
பாட்னா: நவம்பர் 7, 8
ராஜ்பூர்: நவம்பர் 15
ராஞ்சி: நவம்பர் 7, 8, 15
ஷிலாங்: நவம்பர் 1, 8, 23
சிம்லா: நவம்பர் 15
ஸ்ரீநகர்: நவம்பர் 1, 15
சென்னை நகருக்கு கூடுதலாக விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் முழு பட்டியல் மற்றும் கூடுதல் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் RBI-ன் விடுமுறை காலெண்டரைப் பார்க்கலாம்.
இதையும் படிக்க:
LPG முதல் கிரெடிட் கார்டு வரை… நவம்பர் முதல் 6 முக்கிய மாற்றங்கள்
ஆன்லைனில் வங்கி வசதி:
வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இன்றைய காலக்கட்டத்தில் வங்கியின் பெரும்பாலான சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. இந்த விடுமுறை நாட்களில், நீங்கள் வங்கி மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தால், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது UPI போன்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தவும். பணம் எடுப்பதற்கு, உங்கள் வசதிக்காக ஏடிஎம்கள் இருக்கும் என்பதால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
.
&w=750&resize=750,375&ssl=1)
