இன்று (09) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.22 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.303 ஆகும்.
சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை ரூ.24 ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதன் புதிய விலை ரூ.353 ஆகும்.
புதிய விலைகள்
ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.25 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.365 ஆகும்.
ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.24 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.317 ஆகும்.
மண்ணெண்ணெய் விலையை ரூ.13 ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதன் புதிய விலை ரூ.195 ஆகும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
