• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நள்ளிரவில் அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பிரபல நடிகைகள்… பண்ணை வீட்டில் ‘ரேவ் பார்டி’ – நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
நள்ளிரவில் அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பிரபல நடிகைகள்… பண்ணை வீட்டில் ‘ரேவ் பார்டி’ – நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு பண்ணை வீட்டில் நடந்த இரவு நேர பார்ட்டியில், பிரபல நடிகைகள் கலந்துகொண்டு, போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

வெளிநாட்டு மது, ஹைட்ரோ கஞ்சா, கொகைன் என உயர்ரக போதைப் பொருட்களுடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியை ‘ரேவ் பார்டி’ என ஸ்டைலாக அழைக்கின்றனர். ரேவ் பார்ட்டியில் இளம் பெண்கள் போதையிலேயே விடிய விடிய நிர்வாணமாக நடனமாட வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடற்கரையோர ரிசார்ட்டுகளிலும், பண்ணை வீடுகளிலும் வாரந்தோறும் ரேவ் பார்டி நடத்தப்படுகிறது. இப்படி ஒரு ரேவ் பார்டியில் தெலுங்கு திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகைகள் கலந்துகொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

விளம்பரம்

பெங்களூரின் புறநகரில் கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டி நடந்து கொண்டிருப்பதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாலை 3 மணிக்கு போலீசார் இந்த பண்ணை வீட்டிற்குள் அதிரடியாக நுழைய, போதையில் நடனமாடி கொண்டிருந்த பெண்கள் சிதறி ஓடியுள்ளனர். காருக்குள்ளும், பண்ணை வீட்டின் அறைகளிலும் ஆங்காங்கே சென்று அவர்கள் பதுங்கியுள்ளனர்.

ஒவ்வொருவரையும் போலீசார் துரத்தி சென்று பிடிக்க, அப்போதுதான், பண்ணை வீட்டு வாசலில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் “பாஸ்” கொண்ட ஒரு கார் நிற்பதையும் போலீசார் கண்டுபிடித்தார்கள். சிலர் தங்களிடமிருந்த போதைப்பொருட்களை, பண்ணை வீட்டிலுள்ள பாத்ரூமுக்குள் போட்டு அழிக்க முயன்றதாகவும் தெரிகிறது.

விளம்பரம்
பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் போட்டோஸ்.!


பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் போட்டோஸ்.!

ரேவ் பார்ட்டியில் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தியிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். பிரம்மாண்டமான அந்த பண்ணை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும், ஜாக்குவார், ஆடி என 15-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அந்த கார்களிலெல்லாம் போலீசார் சோதனை நடத்த, காருக்குள்ளும் போதைப்பொருட்கள் இருந்ததும், அதில் வைத்தே பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியில், இந்த ரேவ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த ஹைதராபாத்தை சேர்ந்த வாசு என்பவரை போலீசார் பிடித்தனர்

ஈவண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வரும் வாசுவுக்கு ஞாயிறு அன்று பிறந்தநாளாம். இதற்காக அவர் நடத்திய பார்டிக்கு தெலுங்கு நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சன் செட் டூ சன் ரைஸ் அதாவது சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை என பெயரிட்டு இந்த பார்டியை அவர்கள் கொண்டாடியுள்ளனர். நடிகைகள், மாடல் அழகிகள் என 30 பெண்கள் பார்டியை சிறப்பிக்க விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. தொழில் அதிபர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த இரவு நேர பார்டியில் கலந்துகொண்டு ஆட்டம் போட்டுள்ளனர்.

விளம்பரம்

பண்ணை வீட்டில் நடந்த இரவு நேர பார்டியில் கலந்து கொண்டவர்கள் கொகைன், ஹைட்ரோ கஞ்சா, வெளிநாட்டு மதுபானம் என உயர்ரக போதைப் பொருட்களை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதை ஆதாரத்துடன் நிரூபிக்க பார்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பண்ணை வீட்டில் வைத்தே ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:  
யூடியூப் நிறுவனத்துக்கு மருத்துவத்துறை கடிதம் : சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்!

பரிசோதனை முடிவில் யாரெல்லாம் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படுகிறதோ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பண்ணை வீட்டில் இருந்து கஞ்சா, மது பாட்டில், போதை மாத்திரை, கொகைன் என ஏராளமான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விளம்பரம்

பார்டியை ஏற்பாடு செய்த வாசு, போதைப் பொருள் விற்பனை செய்தவர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகைகள், மாடல் அழகிகள் பங்கேற்ற பார்டியில் போலீசார் சோதனை நடத்தியதும், போதையில் அவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோவும் பெங்களூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

.

Read More

Previous Post

இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

Next Post

கங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான் நிலைமை! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
கங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான் நிலைமை! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

கங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான் நிலைமை! - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin