Last Updated:
கடன்களிலேயே இரண்டு வகையான கடன்கள் உள்ளன. ஒன்று good debt எனப்படும் நல்ல கடன் மற்றும் bad debt எனப்படும் மோசமான கடன்.
நிதி விவகாரத்தைப் பொறுத்தவரை “கடன்” என்ற சொல் பெரும்பாலும் பதற்றம் மற்றும் எச்சரிக்கை உணர்வை பலருக்கும் தூண்டும். கடன் என்பது ஒரு எதிர்மறை கருத்தைக் கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் இது ஒரு பெரும் நிதிச் சுமையாகக் கருதப்படுகிறது. ஆனால், எல்லா கடன்களும் உங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆம்… கடன்களிலேயே இரண்டு வகையான கடன்கள் உள்ளன. ஒன்று good debt எனப்படும் நல்ல கடன் மற்றும் bad debt எனப்படும் மோசமான கடன். எனவே நிதி வல்லுநர்கள், வளங்களை வீணாக்கும் ‘மோசமான கடன்கள்’ மற்றும் உங்கள் நீண்டகால இலக்குகளை அடையவும், செல்வத்தை உருவாக்கவும் உதவும் ‘நல்ல கடன்கள்’ ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை எடுத்துரைத்து, தனிநபர்கள் கடன்கள் மீதான மோசமான பிம்பத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகின்றனர். எனவே இங்கே நல்ல கடன் என்றால் என்ன? அது எப்படி உதவியாக இருக்கும்? என்பதைப் பார்ப்போம்.
உங்கள் வாழ்வில் நிதி வளர்ச்சியை ஆதரிக்கும் அல்லது உங்களின் நீண்டகால இலக்குகளுக்கு பங்களிக்கும் வகையான கடன்களை வாங்குவதே நல்ல கடன்கள் ஆகும். இந்த வகை கடன் பொதுவாக காலப்போக்கில் வருமானத்தை ஈட்டக்கூடிய கல்வி அல்லது வணிக முயற்சிகளுக்கு உரிய நிதியளிக்க பயன்படும்.
வீடு வாங்குவது, பட்டப்படிப்பில் முதலீடு செய்வது அல்லது ஒரு தொழிலை விரிவுபடுத்துவது என எதுவாக இருந்தாலும், இந்த வகையான கடன் உங்கள் எதிர்கால வருமானம் அல்லது சொத்து மதிப்பை அதிகரிப்பதோடு தொடர்புடையது. சுருக்கமாக சொன்னால், நல்ல கடன் என்பது உங்கள் நிகர மதிப்பை அதிகரிக்க அல்லது எதிர்கால வருமானத்தை உருவாக்க உதவும் கடன் ஆகும். முக்கியமாக, இது பொதுவாக குறைந்த வட்டி அல்லது வருடாந்திர சதவீத விகிதத்தைக் (APR) கொண்டிருக்கும்.
மோசமான கடனிலிருந்து, ஒரு நல்ல கடனை வேறுபடுத்துவது அது வாங்கப்படுவதன் நோக்கம் மற்றும் அமைப்பு ஆகிய இரண்டும் ஆகும். நல்ல கடன் ஒரு முதலீடாகக் கருதப்படுகிறது. மேலும், இது மலிவு வட்டி விகிதங்கள் மற்றும் நிர்வகிக்கக்கூடிய வகையிலான ரீபேமென்ட் டெர்ம்ஸ்களுடன் வருகிறது.
நல்ல கடனுக்கான சில பொதுவான எடுத்துக்காட்டுகள்:
- உயர்கல்வி அல்லது தொழில்முறை மேம்பாட்டிற்காக மாணவர் கடன்களை வாங்குவது பெரும்பாலும் அது அவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளாக மாறும் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, கடனின் உதவியுடன் MBA போன்ற உயர் பட்டம் பெற படிப்பது அவரின் வருமான வரம்பை கணிசமாக உயர்த்தும்.
- எப்போதுமே ரியல் எஸ்டேட் பாரம்பரியமாக ஒரு உறுதியான முதலீட்டு ஆதாரமாகக் கருதப்படுகிறது. காலப்போக்கில் சொத்து மதிப்புகள் உயரும் என்பதாக, வீட்டுக் கடன் செல்வத்தை வளர்க்கும் சொத்தாக பார்க்கப்படுகிறது.
- ஒருவர் கடன் வாங்கி தனது வணிகத்தை விரிவாக்கி லாபத்தை ஈட்டலாம் மற்றும் நீண்டகால வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக முதலீடு நன்கு திட்டமிடப்பட்டிருந்தால், பிசினஸ் லோன் நிச்சயமாக நல்ல கடனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். ஏனெனில், இது நிலையான வளர்ச்சி மற்றும் போட்டித் தன்மையை உறுதி செய்கிறது.
- வீடு புதுப்பிக்க அல்லது மருத்துவத் தேவைகளுக்கான கடன்களும் நல்ல கடன்கள் ஆகும். இந்தக் கடன்கள் உங்கள் சொத்துக்களை மேம்படுத்த உதவுகின்றன அல்லது உங்கள் நிதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகின்றன.
இவை ஏன் நல்லதாக கருதப்படுகின்றன?
- குறைந்த, நியாயமான வட்டி விகிதங்கள்
- வட்டி செலுத்துதல்களில் (வீட்டுக் கடன்கள் அல்லது கல்விக் கடன்கள் போன்றவை) சாத்தியமான வரிச் சலுகைகள்
- சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால் கிரெடிட் ஸ்கோரில் நேர்மறை தாக்கம்
July 11, 2025 7:33 PM IST
நல்ல கடன் (Good Debt) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா…? தனிநபர் நிதி வளர்ச்சியை ஆதரிக்குமா…?