• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நர்சிங் கல்லூரியில் ராகிங் கொடுமை.. – சீனியர் மாணவர்களின் எல்லை மீறிய சைக்கோ தனம்

GenevaTimes by GenevaTimes
February 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நர்சிங் கல்லூரியில் ராகிங் கொடுமை.. – சீனியர் மாணவர்களின் எல்லை மீறிய சைக்கோ தனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 13, 2025 8:23 PM IST

கோட்டயம் அரசு நர்சிங் கல்லூரியில் 5 சீனியர் மாணவர்கள் ராகிங் கொடுமை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

News18News18
News18

கேரள மாநிலம், கோட்டயம், காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் நடந்து வந்த ராகிங் கொடுமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கல்லூரியில் படிக்கும் ஐந்து சீனியர் மாணவர்களுக்கு, திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என்றாலே பிடிக்காது என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வகுப்புகளுக்கு போகும்போதும் வரும் போதும் திருவனந்தபுரம் மாணவர்களை துன்புறுத்துவார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

ராகிங் எனும் பெயரில் சீனியர் மாணவர்கள் 5 பேர் செய்யும் அட்டகாசம் எல்லை மீறி போயிருக்கிறது. அவர்கள் முதலாமாண்டு மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத பல்வேறு கொடுமைகளை செய்துள்ளனர். விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்தி அலற விட்டுள்ளனர். காம்பஸால் பின்புறத்தில் குத்தி ரசித்துள்ளனர். மாணவர்களை கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்து அவர்களது காயங்களில் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிச்சல் மிகுந்த லோஷன்களை தடவி விட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் எரிச்சல் தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டதை கண்டு ரசித்துள்ளனர். மேலும் அந்த லோஷனை முகம், தலை மற்றும் வாய் உள்ளிட்ட இடங்களிலும் தேய்த்துவிட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர். சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து போதையில் தள்ளாட வைத்துள்ளனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியிருக்கின்றனர்.

சீனியர் மாணவர்களின் இந்த ராகிங் கொடுமை சுமார் 4 மாதங்களுக்கு தொடர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் துணிந்து கல்லூரியின் ராகிங் எதிர்ப்புக் குழுவிடம் தகவல் தெரிவிக்க ரகசியமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சில செல்போன் வீடியோக்கள் மற்றும் காயங்களை வைத்து ராகிங் நடைபெற்றிருப்பதை உறுதி செய்தனர் அந்த குழுவினர்.

உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த கோட்டயம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்து குறிப்பிட்ட அந்த 5 சீனியர் மாணவர்களை கைது செய்தனர். கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அரசு நர்சிங் கல்லூரியில் அரங்கேறியிருக்கும் இந்த ராகிங் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

February 13, 2025 8:23 PM IST

Read More

Previous Post

வரவு செலவு திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்

Next Post

ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையை கைவிட்ட ஹோண்டா, நிசான், மிட்சுபிஷி | Makkal Osai

Next Post
ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையை கைவிட்ட ஹோண்டா, நிசான், மிட்சுபிஷி | Makkal Osai

ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையை கைவிட்ட ஹோண்டா, நிசான், மிட்சுபிஷி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin