“விழுந்தாலும் எழு என்று சொல்வதுதான் நம் உள்ளம் – அதுதான் நம்பிக்கையின் வாசல்.”
நம்பிக்கை என்பது ஓர் அன்பளிப்பு. நமக்கு அது வழங்கப்பட்டுள்ளது. அது வளர்வதற்காக காத்திருக்கும் ஒரு சிறு விதை போன்று இருக்கிறது.அது ஓர் அழகான, பொன்னிறமான சூரியனைப் போன்றது.சூரியன் நாளை திரும்பவும் உதயமாகும் என்ற நம்பிக்கை இல்லையெனில், ஒவ்வொரு இரவும் நாம் அதை எதிர்கொள்வது மிகக் கடினமாகிவிடும். ஆனால், “நாளை பற்றி தெரியாத நேரத்தில், இன்றைய நம்பிக்கையே உயிரின் மூச்சு.” என்ற உண்மையை நம் உள்ளம் நம்புகிறது.
நாம் அனைவருக்கும் வாழ்வில் அந்த நம்பிக்கை தேவையானது. நம் வாழ்வில் நல்லவை நடக்கும், கெட்டவையும் நடக்கும். நமக்கு பிடித்தவை நடக்கும், பிடிக்காதவை கூட நேரிடும். இவை எல்லாம் நம்மை பாதிக்கும்; மனம் தளர்ந்துவிடும். அந்த நேரத்தில் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நம்முள்ளே பல விஷயங்களின் கலவை உள்ளது – அச்சமும் அறியாமையும் இருக்கிறது. அதே நேரத்தில், நம்மை ஊக்குவிக்கும் அபார சக்தியும் நம்முள் உள்ளது. அது நம்மை, “தொடர்ந்து செல், அடுத்து அடியை எடு.” என ஊக்குவிக்கிறது. மனம் தளர்ந்திருந்தாலும், “புன்னகை செய்,” என்று அது நம்மிடம் பேசுகிறது. இக்கட்டான தருணங்களில், “விடு, எல்லாம் சரியாகும்,” என்று நம்பிக்கையான வார்த்தைகள் நம்முள் விழுகிறது.இந்த “உள்ளம்”தான் நமக்காக இந்த நம்பிக்கையை உருவாக்குகிறது. அது நம்மை சமநிலையில் வைத்திருக்கின்றது – இல்லையெனில் நாம் உருகுலைந்து போயிருப்போம்.
நம்பிக்கை இல்லாத நேரத்திலும், அந்த அமைதியான சக்தி நம்மை வழிநடத்துகிறது. அது நமக்குள் நிவாரணம், தைரியம், அமைதி, நம்பிக்கை ஆகியவற்றை தூண்டுகிறது. நம்முள் உள்ள நம்பிக்கையின் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டே இருக்கிறது.எனவே, நாம் அந்த நம்பிக்கையோடு நம் வாழ்வில் உறுதியாக நடைபோட வேண்டும். அது நம்மை மேலெழுக்கும். அது தான் நம்மை நம்மாக வைத்திருக்கும் அடித்தளம்.
“அறியாமை அச்சத்தைத் தரும், நம்பிக்கை ஒளியைத் தரும்.”
கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள் வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:
https://www.youtube.com/@PremRawatOfficial
https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB




