Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவில் பாரம்பரிய இசைக் கருவியை வாசித்து வரவேற்பு பெற்றார்.
ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பாரம்பரிய இசைக் கருவியை வாசித்து அசத்தினார்.
பிரேசில் நாட்டில் இருந்து நமீபியாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, விந்தோக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் நெடும்போ நந்தி தைத்வா விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
தொடர்ந்து அந்நாட்டு பாரம்பரிய இசைக் கருவியை வாசித்து, நடனமாடி பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர்களுடன் சேர்ந்த பிரதமரும் இசைக் கருவியை வாசித்தார்.
அந்நாட்டை சேர்ந்தவர்கள் பிரதமரின் முன்பு யோகா செய்து அசத்தினர். பிரதமரை வரவேற்பதற்காக நமீபியாவில் உள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் விமான நிலையத்தில் குவிந்தனர்.
பிரதமர் மோடி முதன்முறையாக நமீபியாவுக்கு சென்றுள்ளார். மேலும் இந்திய பிரதமர் ஒருவரின் 3வது நமீபிய பயணம் இதுவாகும்.
July 09, 2025 7:56 PM IST


