Last Updated:
துருக்கி, இந்தியாவின் உதவியை மறந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கி, பாக் ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைகளை தாக்கியது. துருக்கி, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
நிலநடுக்கத்தின் போது இந்தியா செய்த உதவியை மறந்து துருக்கி பாகிஸ்தானிற்கு ஆயுதம் சப்ளை செய்துள்ளது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானிற்கு துருக்கி உதவி செய்வது ஏன்?
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான மோதலில் சீனா, துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு பலத்த ஆதரவை வழங்க முன்வந்ததாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே பல்வேறு வழிகளில் உதவி செய்து பாகிஸ்தானை துருக்கி தன்னுடைய கைக்குள் வைத்துள்ளது. மே 2 ஆம் தேதி அன்று துருக்கியின் Ada வகுப்பு (Ada-class corvette) நீர்மூழ்கி போர்க் கப்பல் கராச்சி துறைமுகத்தில் நின்றது. மேலும் துருக்கியின் சி 130 ஹெர்குலஸ் ராணுவ விமானம் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதன் மூலம் துருக்கியில் இருந்து பாகிஸ்தானிற்கு ஆயுதங்களை சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதை சமீபத்தில் பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் உறுதிப்படுத்தியது. துருக்கி கொடுத்த Asisguard Songar வகை ட்ரோன்களை ஏவியே, இந்திய மேற்கு எல்லைகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. கிட்டத்தட்ட 300 ட்ரோன்களை ஏவ, இந்திய பாதுகாப்புப் படை அவைகளைத் தாக்கி முறியடித்தது. மேற்கு ஆசியாவில் பாகிஸ்தானின் ஒரே நட்பு நாடாக உள்ள துருக்கி மட்டும் தான் ஆபரேஷன் சிந்தூரை வெளிப்படையாகக் கண்டித்தது. இப்படி பாகிஸ்தானிற்கு துருக்கி ஆதரவு குரல் கொடுப்பது ஏன்?.
பனிப்போரின்போது, துருக்கியும் பாகிஸ்தானும் மத்திய ஒப்பந்த அமைப்பு (CENTO) மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மேம்பாடு (RCD) போன்ற குழுக்களில் ஒன்றாக இருந்தன. நெருக்கடியான காலங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எப்போதும் ஆதரவளித்துள்ளன. காஷ்மீர் விவகாரத்திலும் துருக்கி பாகிஸ்தானுக்கு பலத்த ஆதரவை வெளிக்காட்டியே வந்தது. ஆபத்து காலத்தில் இந்தியா தனக்குச் செய்த உதவிகளை மறந்து, இந்தியாவுக்கு எதிராகப் போராடும் பாகிஸ்தானிற்கு ஆயுதங்களைக் கொடுத்துள்ளது, துருக்கி.
மேற்காசிய நாடான துருக்கியின் அங்காரா உள்ளிட்ட இடங்கள் 2023ல் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, ‘ஆப்பரேஷன் தோஸ்த்’ என்ற மீட்பு நடவடிக்கையைத் துவங்கி, முதல் நாடாக இந்தியா களம் இறங்கியது. இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்க, ‘கருடா’ ட்ரோன்களையும், மீட்புப் பணிகளுக்கு ‘சி 17’ ரக போர் விமானங்களையும் அனுப்பியது. நம் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதையெல்லாம் மறந்து இஸ்லாமிய நாடு என்ற காரணத்திற்காகத்தான் துருக்கி குரல் கொடுத்து வருவதாகப் பார்க்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
நன்றியை மறந்த துருக்கி.. பாகிஸ்தானிற்கு ‘வலிய’ சென்று உதவியது ஏன்? – வெளியான திடுக் தகவல்..!


