செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘BRICS’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்காகவும் நான் இந்தியா பயணிக்கவுள்ளேன் என்றும், வாய்ப்பு அமைந்தால், தமிழகத்திற்கும் ஒரு குறுகிய காலப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன். தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், தமிழகத்தின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும், திறம்பட வழிநடத்தி ஆட்சிபுரியத் தேவையான வலிமையும் ஞானமும் முதலமைச்சர் விஜய்க்குத் தொடர்ந்து கிடைக்கப்பெறுமாக” எனத் தெரிவித்துள்ளார்.


