Last Updated:
கர்நாடகா, பெலகாவியில் 15 வயது சிறுமி ஆறு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் 15 வயது சிறுமியை ஆறு இளைஞர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த சில தினங்களாக வீட்டில் வழக்கமாக இல்லாமல் இருப்பதுபோல் இல்லாமல் இருந்துள்ளார். இதனைக் கவனித்த அவரது பெற்றோர் அவரிடம் பொறுமையாக விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுமி சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தற்போது வரை ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ஒரு நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்திருப்பதாவது, அந்தச் சிறுமி கடந்த 2024 டிசம்பர் முதல் ஜனவரி 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரு முறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். முதல் முறை, தனது நண்பர் அழைத்ததன் பெயரில் அவருடன் அந்தப் பகுதியில் இருக்கும் மலைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அந்த ஆண் நண்பர் அவரது ஐந்து நண்பர்களை வரவழைத்துள்ளார்.
அங்கு அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அப்போது அதனை ஐந்து நபர்களில் ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்துள்ளார். பிறகு அந்த வீடியோவைக் காட்டி மீண்டும் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தற்போது காவல்துறையினர் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
June 01, 2025 9:23 PM IST
நண்பரை நம்பிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்… ஆறு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை


