வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் 31 வயதுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த பெண் தனது கணவருடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரும், அவரது நண்பரும் கூரிய ஆயுதத்தால் பெண்ணை கொலை செய்து வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஹிங்குரன்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் கணவனும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

