Last Updated:
கேரளாவில் விதிகளை மீறி நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை, மூதாட்டி ஒருவர் வழிவிடாமல் தடுத்து நிறுத்தி சாலையில் பயணிக்குமாறு அறிவுறுத்தினார்.
கேரளாவில் நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை தடுத்து நிறுத்திய மூதாட்டிக்கு அம்மாநில காவல்துறையினர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.
கோழிக்கோட்டில் விதிகளை மீறி நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை, அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி பிரபாவதி வழிவிடாமல் தடுத்து நிறுத்தி சாலையில் பயணிக்குமாறு அறிவுறுத்தினார்.
கடைசியில் வழிக்கு வந்த அந்த நபர், நடைபாதையில் இருந்து கீழே இறங்கி சாலையில் வாகனத்தை இயக்கினார். இந்தக் காட்சி இணையதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கேரள மாநில காவல்துறையினர், மூதாட்டி பிரபாவதியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
First Published :
Feb 13, 2026 10:04 PM IST


