• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நடுவானில் விமானி மீது கத்திகுத்து | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நடுவானில் விமானி மீது கத்திகுத்து | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட பிளைதுபாய் விமானத்தில், நடுவானில் விமானத்தை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


180 பேருடன் பயணித்த விமானம் ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்தபோது, இந்தியாவைச் சேர்ந்த விமானி சுமித் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த நிலையிலும் சுமித் மச்சார் எதிர்த்துப் போராடியதுடன், விமானி அறையின் கதவைத் திறக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.


இதன்போது விமானம் சுமார் 34 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 17 ஆயிரம் அடி வரை திடீரெனக் கீழிறங்கியதால் பயணிகள் பீதியடைந்தனர்.


விமானி அறைக்குள் நுழைந்த இஸ்ரேலைச் சேர்ந்த பயணி யானிவ் ஹயூன், துணை விமானியை மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு வந்ததுடன், மேலும் சில பயணிகளின் உதவியுடன் அவரைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானத்தின் கட்டுப்பாடு மீண்டும் சீரமைக்கப்பட்டு, அவசர தகவலும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.


தொடர்ந்து விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. காயமடைந்த விமானி சுமித் மச்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக துணை விமானி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


விமானத்தை கடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தடுக்க உதவிய யானிவ் ஹயூனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்துப் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடுவானில் இடம்பெற்ற இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.




Read More

Previous Post

டாக்டர் எம்., ஹஸ்மாவின் கல்லறைக்குச் செல்வதற்காக IJN-ஐ விட்டு வெளியேறினார்; சரவணனின் சிறுவயது மகனுக்கு MACC நோட்டீஸ் வழங்கியதாகக் கூறப்படுவதை MACC மறுத்துள்ளது. – Malaysiakini

Next Post

விஜய்க்கு ஒருபடி மேலே போன சந்திரபாபு நாயுடு! ஆந்திராவில் பெண்களுக்கு இலவச ஏசி பஸ்! அதிரடி அறிவிப்பு | Chandrababu Naidu Goes One Step Ahead of Vijay! Free AC Buses for Women in Andhra Pradesh, Big Announcement

Next Post
விஜய்க்கு ஒருபடி மேலே போன சந்திரபாபு நாயுடு! ஆந்திராவில் பெண்களுக்கு இலவச ஏசி பஸ்! அதிரடி அறிவிப்பு | Chandrababu Naidu Goes One Step Ahead of Vijay! Free AC Buses for Women in Andhra Pradesh, Big Announcement

விஜய்க்கு ஒருபடி மேலே போன சந்திரபாபு நாயுடு! ஆந்திராவில் பெண்களுக்கு இலவச ஏசி பஸ்! அதிரடி அறிவிப்பு | Chandrababu Naidu Goes One Step Ahead of Vijay! Free AC Buses for Women in Andhra Pradesh, Big Announcement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin