Last Updated:
புக்கட்டிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியது. சில பயணிகள் காயமடைந்தனர். விமானம் பத்திரமாக டெல்லி வந்தடைந்தது.
புக்கட்டிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் குலுங்கிய நிலையில், சில பயணிகள் காயமடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் புக்கட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் விமானம் திடீரென நடுவானில் குலுங்கியுள்ளது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
எனினும் விமானம் பத்திரமாக டெல்லி வந்து இறங்கியது. அதில் பயணித்த விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. டெல்லியில் விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவப் பணியாளர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், தாய்லாந்திருந்து புறப்பட்ட AI 2379 விமானம் நடுவானில் சில விநாடிகள் குலுங்கியதாகவும், இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


