விமான பயணத்தின்போது நடுவானில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மலேசியன் ஏர்லைன்ஸ் சுமார் 180 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்தது.
வேலையிட விபத்தில் உயிரி*ழந்த வெளிநாட்டு ஊழியர்… சக ஊழியரின் பேச்சை கேட்கவில்லை
அப்போது, விமானத்தில் பயணம் செய்து வந்த சுப்பிரமணியம் சோமு (65) என்ற ஆடவருக்கு நடுவானில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, விமான குழு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளது.
அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானம் சென்னை வந்திறங்கியதும் உடனடியே உள்ளே சென்று அவரை சோதித்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவ குழுவினர் சோதித்து தகவல் தெரிவித்தனர். பின்னர், அவரின் உடல் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் பின்னர் விமானம் சுத்தம் செய்யப்பட்டு பயணிகளுடம் மீண்டும் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது.
நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி, அதை தொடர்ந்து ஏற்பட்ட அவரின் மரணம், சக பயணிகளுக்கும் விமான நிலையத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை… 3 லட்சத்தை ஏமாந்த தஞ்சை நபர்

