Last Updated:
கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கிய நிலையில் விமானம் முழுவதையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவத்திற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை பயணிகள் கண்டுள்ளனர். இதுகுறித்து விமான நிறுவனத்தின் ஊழியர்களிடம் தெரிவித்ததை அடுத்து இரு பயணிகளுக்கு மாற்று இருக்கையை ஏர் இந்தியா வழங்கியுள்ளது.
இதையடுத்து, கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கிய நிலையில் விமானம் முழுவதையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதன்பின்னர் விமானம் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு சரியான நேரத்தில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், கரப்பான் பூச்சிகளால் அசவுகரியம் அடைந்த பயணிகளுக்கு உடனடியாக மாற்று இருக்கைகள் வழங்கப்பட்டதாகவும், விமானம் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டாலும் சில நேரங்களில் பூச்சிகள் விமானத்திற்குள் நுழையவே செய்கின்றன என்றும் கூறியுள்ளது.
மேலும் அசெளகரியம் அடைந்த பயணிகளிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
August 04, 2025 3:17 PM IST


