தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில் உள்ள அர்காவதி லேஅவுட்டின் குடியிருப்பு நிலம், தும்கூரின் தொழில்துறை நிலம் மற்றும் ஆனேகல் வட்டத்தில் ஒரு விவசாய நிலம் ஆகியவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சொத்துக்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.34.12 கோடி என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.