இளம்பெண் ஒருவர் சாலையோர கடையில் பரோட்டா தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது. பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் இவரா பரோட்டா தயாரித்து வருகிறார்? என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். இவரது கடையில் பரோட்டா வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கிறார்கள்.
இந்த அழகிய இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் அதிக பார்வையை பெற்று வருகிறது. சோசியல் மீடியாவின் தாக்கம் அதிகம் உள்ள இந்த காலத்தில் உங்களின் ஒரு சில வீடியோக்கள் வைரலானாலே போதும். நீங்கள் எப்படியாவது பிரபலம் ஆகி விடுவீர்கள். டெல்லியைச் சேர்ந்த சந்திரிகா தீட்சித் என்ற பெண் மும்பையில் வடபாவை விற்று வந்தார். அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதன் விளைவாக அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நீங்கள் பிரபலமானவராக இருந்தாலே உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இந்நிலையில் தாய்லாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பரோட்டா விற்பனை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக பார்வையை பெற்று வருகிறது.
இவர் சாலையோர கடையில் பரோட்டா விற்பனை செய்கிறார். புய் என்ற பெயரைக் கொண்ட அவர், PUY ROTI LADY என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவிட்டு வருகிறார். அவருக்கு உதவியாக அவரது சகோதரி கடையை பார்த்துக் கொள்கிறார். இருவரும் வாழை பழ பரோட்டா, முட்டை பரோட்டா என விதவிதமாக செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
மிகவும் மெல்லிய பேப்பரைப் போல மைதா மாவை உருட்டி, புய் பரோட்டா போடுகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு கலை நயத்துடன் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோவை புய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன.
சமையலின் ராணியாக இருக்க இவர் தகுதியானவர் என்றும், அழகிய இந்தப் பெண்ணின் செயல்பாடுகள் திகைப்பை ஏற்படுத்துவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பரோட்டாவை ஆண் ஒருவர் தயாரித்திருந்தால், அவர் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்று மக்கள் கூறி இருப்பார்கள். ஆனால் இவர் அழகாக இருப்பதால் அது பற்றி யாரும் சொல்லவில்லை என்று இன்னொரு பயனர் கிண்டலாக கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
