சென்னை:
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக ரம்யா மோகன் என்ற பெண் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தமக்கு நன்கு அறிமுகமான ஒரு பெண்ணை விஜய் சேதுபதி பாலியல் ரீதியில் பயன்படுத்திக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆசைக்கு இணங்க கேரவேன் வாகனத்தில் வைத்து அந்தப் பெண்ணுக்கு ரூ.2 லட்சமும் பாலியல் விருப்பங்களுக்காக ரூ.50 ஆயிரமும் விஜய் சேதுபதி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார் ரம்யா.
சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் அதிகரித்திருப்பதாகவும் இது வெறும் விளையாட்டல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
“நான் நன்கு அறிந்த, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இத்தகைய சூழலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தற்போது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளார் விஜய் சேதுபதி. ஆனால், இன்று நல்லவர் போன்று வேடம் போடுகிறார். இப்படித்தான் அந்தப் பெண்ணைப் போன்றுதான் பலரது கதையும் உள்ளது,” ரம்யா மோகன் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து பதிவிட்ட பெண், அதை உடனடியாக நீக்கியதாகத் தெரிகிறது. ஆனால், ரம்யா மோகன் அதனை தமது பதிவில், விஜய் சேதுபதியைச் சாடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ரம்யா மோகனைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனினும், விஜய் சேதுபதி இந்த விவகாரம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், “சிலர் உண்மையை ஒப்புக்கொள்வதைவிட பாதிக்கப்பட்டவரைக் குறை சொல்வதிலும் ஆதாரம் குறித்து கேள்வி எழுப்புவதிலும் தான் தங்களது கவனத்தைச் செலுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் தொலைபேசி உரையாடல் அவரது பதிவு ஆகியவற்றை பார்க்கும் போது அவரது வலியும் வேதனையும் நன்கு புரிகிறது, என்றும் ரம்யா மோகன் மேலும் கூறியுள்ளார்.