கோலாலம்பூர்:
மலேசிய நடிகரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று உயிரிழந்தார்.
இவர் தொலைக்காட்சியில் நடைபெற்ற பாடல் திறன் போட்டியின் வாயிலாக பாடகராக முதன்முதலில் அறிமுகமானார்.
அதன்பின் அறிவிப்பாளராகவும், சினிமா துறையில் நடிகராகவும் வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடங்கினார்.
அவரின் திடீர் மறைவு, தமிழ் கலைத் துறையை மட்டுமல்லாது, அவரது சகக் கலைஞர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவரையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
The post நடிகர், பாடகர் சிவகுமார் ஜெயபாலன் மரணம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

