Last Updated:
ஆர்சி பி பெங்களூரு 250 ரன்கள் குவித்து, சிஎஸ்கே 207 ரன்களில் ஆல் அவுட், 43 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ஹாட்ரிக் தோல்வி, ரசிகர்கள் அதிர்ச்சி
நடப்பு ஐபிஎல் சீசனில் ஹாட்ரிக் தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த ஆர்.சி.பி., ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு எதிரான தனது அதிகபட்ச ஸ்கோரான 250 ரன்களை குவித்தது.
தொடக்க வீரராக களம் இறங்கிய கோலி 18 பந்துகளில் 28 ரன்களுடன் அவுட்டானதை அடுத்து, அதிரடியாக ஆடிய தேவ்தத் படிக்கல், பில் சால்ட் ஜோடி மளமளவென ரன்களைச் சேர்த்தனர். ஆட்டத்தின் இறுதியில் சிஎஸ்கே வீசிய பந்துகளை டிம் டேவிட், ரஜத் படிதார் ஜோடி நாலாபுறமும் சிதறடிக்க, டிம் டேவிட் வெறும் 25 பந்துகளில் 70 ரன்களும், ரஜத் படிதார் 19 பந்துகளில் 48 ரன்களும் குவித்தனர்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆர்.சி.பி. 250 ரன்களைச் சேர்த்தது. தொடர்ந்து 251 ரன்கள் இலக்குடன் சி.எஸ்.கே. களம் இறங்க, சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மாத்ரே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
சர்பராஸ் கான் நம்பிக்கையோடு விளையாடி அரை சதம் அடித்த நிலையில், பிரஷாந்த் வீர், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் அணியை கரை சேர்க்க போராடினர். இறுதியில் 19 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சிஎஸ்கே 207 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.


