2024 காலண்டர் ஆண்டின் முதல் 4 முதல் 5 மாதங்களில், தொழில்நுட்பத் துறையில் உலகளவில் சுமார் 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டில், அமேசான், ஆல்பாபெட், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற முக்கிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைத்ததன் மூலம், தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்களை தீவிரப்படுத்தி இருந்தன.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற முக்கிய நிறுவனங்கள் பணிநீக்கங்களை தொடரும் நிலையில், நடப்பாண்டின் முதல் பாதியில் உலகளவில் 333 தொழில்நுட்ப நிறுவனங்களால் சுமார் 98,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் பணிநீக்கங்களும் இதில் அடக்கம். Layoff.ly வெளியிட்ட அறிக்கையின்படி 2022ஆம் ஆண்டை விட, 2023ஆம் ஆண்டில் சுமார் 59% பணி நீக்கங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 2,62,915 ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. பொருளாதார வீழ்ச்சி, நிதி சார்ந்த மூலோபாய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் பணிநீக்கங்கள் தீவிரமாக இருந்தன. பல மாதங்களாக தொழில்நுட்பத் துறையில் இந்த நிலை நீடித்து வரும்நிலையில், 2024-ல் ஆட்குறைப்பு நடவடிக்கை குறைந்தபாடில்லை.
Layoffs.fyi வெளியிட்டுள்ள தரவுகளின்படி நடப்பாண்டின் முதல் பாதியில் மட்டுமே சுமார் 98,834 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் நிறுவனங்களால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. வேலையை விட்டு நீக்கப்படுவோமா என்ற அச்சம் ஏற்கனவே IT ஊழியர்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அமைதியான பணிநீக்கங்கள் மேலும் அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க:
ஜூலை 20 தான் டெட்லைன்… யூசர்களுக்கு Paytm வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இந்திய ஐடி மற்றும் ஐடி-எனேபிள்ட் சர்வீஸ் (ஐடிஇஎஸ்) துறை அதிகளவில் இந்த நடைமுறையை நாடுகிறது, இது ஊழியர்களை பகிரங்கமாக நிறுவனத்தை விட்டு வெளியேற சொல்லாமல் நுட்பமாக பிரஷர் கொடுப்பதை உள்ளடக்கியது. அகில இந்திய IT & ITeS பணியாளர்கள் சங்கம் (AIITEU) 2023ஆம் ஆண்டில் இதுபோன்ற அறிவிக்கப்படாத Silent layoffs எனப்படும் பணிநீக்கங்களால் சுமார் 20,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் நிறுவனத்திற்குள் ஒரு புதிய பொசிஷனை கண்டறிய ஊழியர்களுக்கு 30 நாள் கால அவகாசம் வழங்குவதை அமைதியான பணிநீக்கங்கள் உள்ளடக்கி இருக்கிறது. இந்த 30 நாட்களுக்குள் அதே நிறுவனத்திற்குள் தனக்கு பொருத்தமான வேறொரு பொசிஷனை குறிப்பிட்ட ஊழியர் கண்டறியாவிட்டால் அவர் வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்படுவார். அதேபோல NITES)-ன் மற்றொரு அறிக்கையின்படி, முன்னணி இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் இருந்து நடப்பாண்டில் முதல் ஐந்து மாதங்களில் சுமார் 2,000 மற்றும் 3,000 ஊழியர்கள் மேற்கூறியதை போல அமைதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
கிரெடிட் கார்டு யூஸ் பண்றிங்களா? ஜூன் 30-க்குப் பிறகு பில்களை செலுத்துவது சிக்கலாகலாம்… என்ன செய்ய வேண்டும்?
Silent layoffs முறையில் பொதுவாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நோட்டீஸ் பீரியடை வழங்குகின்றன, இது அவர்களுக்கு மாறுவதற்கு நேரத்தை வழங்குகிறது. மறுபுறம் Quiet firing-ல் நிறுவனங்கள் தங்கள் பணியாளரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்துகின்றன. எந்த முறையாயினும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் மற்றும் வேலை பாதுகாப்பின்மை ஏற்பட வழிவகுக்கிறது. அதேபோல் அனுபவம் வாய்ந்த மற்றும் அதிக ஊதியம் பெறும் பணியாளர்கள் குறிப்பாக அமைதியான பணிநீக்கங்களில் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க இவர்களை வேலையை விட்டு நீக்குவதை இலக்காக கொண்டுள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
