Last Updated:
மைசூரு அர்ஸ் சாலையில் மனைவி புஷ்பா மீது சந்தேகப்பட்ட மகேஷ் கோடாரியால் தாக்கி கொலை செய்தார், நரசிம்மராஜா போலீசில் சரணடைந்த அவர் கைது செய்யப்பட்டார்
மைசூருவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூரு நகரில் உள்ள அர்ஸ் சாலையில் வசித்து வந்தவர் 30 வயதான மகேஷ். இவர் புஷ்பா என்ற 24 வயது இளம்பெண்ணைப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். குடும்ப சூழ்நிலையால் புஷ்பா துணிக்கடை ஒன்றில் பணியாற்ற, ஆரம்பத்தில் அன்பாக நகர்ந்த அவர்களது குடும்ப வாழ்க்கையில் அதே துணிக்கடை வேலைதான் பேரிடியை சந்திக்க வைத்தது.
தினமும் வேலைக்கு செல்லும் புஷ்பா, பணி முடிந்து இரவு வீடு திரும்ப சற்று தாமதமாகும். அதனால் புஷ்பாவிற்கும், மகேஷிற்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படும் வழக்கம் என கூறப்படுகிறது. “வேலை முடிந்து நேரமாக வீட்டிற்கு வந்தால் சமைத்து வைக்க ஏதுவாக இருக்கும். ஆனால் உன் இஷ்டத்திற்குத் தாமதமாக வந்தால் வீட்டு வேலைகளை யார் தான் செய்வார்?” என மகேஷுன் முகத்தை காட்டி வந்தார்.
ஆனால் “வேலைக்கு போகாதே வீட்டை பார்த்துக்கொள்” என அவர் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை. இதனால் கணவன் மீது விரக்தி அடைந்த புஷ்பா அவருடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டார். அதனால் “புஷ்பா வேறொரு ஆணுடன் பழகுகிறாரோ? என மகேஷ் சந்தேகம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல வீட்டிற்கு தாமதமாக வந்த மனைவியிடம், “எவன் கூட ஊர் சுற்றி விட்டு வருகிறாய்? ” என கேட்டு தகராறு செய்துள்ளார். அதில் கோபமடைந்த புஷ்பா, “நான் எவன் கூட ஊர்சுற்றினால் உனக்கென்ன” என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டில் இருந்த கோடாரியால் மனைவி புஷ்பா தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் சுயநினைவை இழக்கச் புஷ்பாவை மேலும் தலையணையால் முகத்தை அமுக்கி துடிதுடிக்கக் மகேஷ் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, சிறிது நேரம் கழித்து, நரசிம்மராஜா காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்ததைக் கூறி, அவரே சரண் அடைந்தார். மகேஷை கைது செய்த போலீஸார் அவரது மனைவியின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பினர். மேலும் விசாரணை முடிந்து தற்போது மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தாலி கட்டிய கணவனே அவரை கொலை செய்த சம்பவம் மைசூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


