தோ பாயோவில் உள்ள HDB அடுக்குமாடி வீட்டில் இன்று (ஜூலை 29) தீ பற்றி எரிந்தது.
பிளாக் 229, லோரோங் 8ல் நடந்த தீ விபத்து குறித்து மதியம் 1:10 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
தோ பாயோ வீட்டில் தீ
தற்போதுய நிலவரப்படி, சம்பவ இடத்தில் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக SCDF கூறியுள்ளது.
புகையை உள்ளிழுத்த மற்றும் தீக்காயங்கள் காரணமாக மூன்று பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காணொளிகளில், அடுக்குமாடி நடுப்பகுதியில் தீ பற்றி எரிவதையும், அதனால் ஜன்னல்களில் இருந்து வெளியாகும் கரும்புகை அப்பகுதியை சூழ்ந்து கொண்டதையும் காணமுடிந்தது.
தீ 10வது மாடியில் உள்ள வீட்டில் மூண்டதாகத் தெரிகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு தான், கடந்த ஜூலை 22 அன்று லோரோங் 1 தோ பாயோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் இறந்தனர் என்பது கூடுதல் தகவல்.