• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோல்வியே ‘தொடாத’ கேப்டன் பவுமா – தென் ஆப்பிரிக்கா சாதித்த போட்டியின் ஹைலைட்ஸ்! | undefeated captain temba bavuma wtc final highlights South Africa achievement

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தோல்வியே ‘தொடாத’ கேப்டன் பவுமா – தென் ஆப்பிரிக்கா சாதித்த போட்டியின் ஹைலைட்ஸ்! | undefeated captain temba bavuma wtc final highlights South Africa achievement
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக் கணத்தை உருவாக்கி தந்த ‘இருவர்’ எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களின், வரலாற்றின் மூலப்படிவமாக இந்த வெற்றி நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எப்படி 1983 உலகக் கோப்பை இந்திய வரலாற்றில் ஒரு நாட்டுப்புறக் கதை போல் புழங்கத் தொடங்கி அதிலிருந்து பலரும் உத்வேகம் பெற்று கிரிக்கெட் இன்று இந்திய அணியை இந்த நிலைக்கு வளர்த்து விட்டதோ, அதேபோல் தென் ஆப்பிரிக்கா அதன் நீண்ட கால நிறவெறி மற்றும் வெள்ளை இன அடக்குமுறைகளில் இருந்து மீண்ட பிறகு ஏகப்பட்ட ஐசிசி தொடர் முக்கியக் கட்ட ஏமாற்றங்களுக்குப் பிறகு இப்போது வென்று கருப்பரின இளைஞர்களுக்கு ஓர் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் திருப்புமுனை. அல்லது புதிய தொடக்கம் என்றே கூறவேண்டும். தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது, 74 ரன்கள் பின் தங்கியிருந்தும் ஆஸ்திரேலியாவை உதைத்து வெற்றி பெறச் செய்த 2-வது இன்னிங்ஸ் பேட்டிங், அதுவும் அவர் காயமடைந்த நிலையில் ஓட முடியாமல் ஓடி, எப்படியோ மன உறுதியுடன் நின்று வெற்றிக்கு அடித்தளமிட்டது உண்மையில் சமீப காலங்களில் காணாத கேப்டன்சி கமிட்மென்ட் என்றால் மிகையாகாது.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கேப்டனாக டெஸ்ட் தொடரில் இன்னும் பவுமா தோற்கடிக்கப்படவில்லை என்பதே. இந்த ஆட்டத்தின் சுவையான தகவல்கள் இதோ:

> 1998-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு இப்போது 2025-ல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் வென்று டெஸ்ட் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதாவது, இடையே 9,722 நாட்கள் காத்திருப்பு இப்போது முடித்து வைத்திருக்கப்பட்டுள்ளது.

> 4-வது இன்னிங்ஸில் 282 ரன்களை வெற்றிகரமாக விரட்டியது தென் ஆப்பிரிக்காவின் 5-வது பெரிய டெஸ்ட் சேசிங் ஆகும். இந்த 5 சேசிங்குகளில் 4 சேசிங் வெற்றிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.

> லார்ட்ஸ் மைதானத்தில் இது 2-வது அதிகபட்ச ரன் விரட்டலாகும்.

> டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி 8 டெஸ்ட்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆண்டு தொடங்கிய இந்த தொடர் வெற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வெற்றியுடன் இன்னும் தொடர வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்பாக 2002-03-ல் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. இப்போது 8 தொடர் டெஸ்ட் வெற்றிகள் என்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக தொடர்ச்சி வெற்றிகளாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் 7 வெற்றிகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுள்ளது.

> அயலக மண்ணில் வென்ற போட்டியில் லார்ட்ஸில் இந்த இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா எடுத்த 138 ரன்கள்தான் அந்த அணியின் ஆகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ரன் எண்ணிக்கையாகும். முதல் இன்னிங்சில் குறைவாக ஸ்கோரை எடுத்த பிறகு டெஸ்ட்டை வெல்வது இது 3-வது முறையாகும்.

> தெம்பா பவுமா 9 டெஸ்ட் போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் டிரா செய்துள்ளார். 10 மேட்ச்களில் கேப்டனாக இன்னும் தோல்வியடையாத ஒரு கேப்டன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இங்கிலாந்தின் பெர்சி சாப்மேன் என்பவர்தான் கேப்டனாக தோல்வியடையாமல் முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

> 1984-ல் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளின் ராய் பிரெட்ரிக்ஸ் எடுத்த 4-வது இன்னிங்ஸ் 138 ரன்களுக்குப் பிறகு இப்போது மார்க்ரமின் 136 ரன்கள்தான் வெற்றியில் லார்ட்ஸில் அதிக 4-வது இன்னிங்ஸ் ஸ்கோராக உள்ளது. குறிப்பாக இருவருமே முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகினர்.

> 4-வது இன்னிங்ஸில் மார்க்ரம் 3 சதங்களை இந்தச் சதத்துடன் சேர்த்து இதுவரை எடுத்துள்ளார். கிரேம் ஸ்மித் 4 சதங்களை 4-வது இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.

> முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் பின்தங்கிய பிறகு வெற்றி பெற்றது என்பது 2011-ல் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் 50 ரன்கள் பின்தங்கிய பிறகு வெற்றியைச் சாதிக்கும் 2-வது தருணமாகும்.



Read More

Previous Post

’திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு கூட பாதுகாப்பு இல்லை’ முதல்வரை சாடும் ஈபிஎஸ்!

Next Post

‘ஈரான் மீது அமெரிக்க படைகள் இறங்கும்!’ – ட்ரம்ப் எச்சரிக்கை

Next Post
‘ஈரான் மீது அமெரிக்க படைகள் இறங்கும்!’ – ட்ரம்ப் எச்சரிக்கை

'ஈரான் மீது அமெரிக்க படைகள் இறங்கும்!' - ட்ரம்ப் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin