Last Updated:
நியூஸ்18 தமிழ்நாடு சார்பாக, புதுச்சேரியில் ‘தோரணம் ஆயிரம்’ உணவுத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பாக, புதுச்சேரியில் ’தோரணம் ஆயிரம்’ உணவுத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நியூஸ்18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பரதநாட்டியம், சிலம்பாட்டம், செண்டை மேளம், குச்சிப்புடி ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் ’தோரணம் ஆயிரம்’ உணவுத் திருவிழா களைகட்டியது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் லட்சுமி நாராயணன், நியூஸ்18-இன் உணவுத் திருவிழா புதுச்சேரியின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு உதவுவதாகப் பாராட்டினார்.
முன்னதாக பேசிய நியூஸ்18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன், பாரதியும், பாரதிதாசனும் வாழ்ந்த மண்ணில் இந்நிகழ்ச்சியை நடத்துவது மகிழ்ச்சி என்றார். புதுச்சேரியின் சாதனையாளர்களை நியூஸ்18-இன் ’சிகரம் விருதுகள்’ விழாவில் சிறப்பித்ததையும் கார்த்திகை செல்வன் குறிப்பிட்டு பேசினார்.
Puducherry (Pondicherry)
December 13, 2025 3:46 PM IST


