Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத், லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
அடுத்து நடைபெறும் மூன்று போட்டிகளின் அடிப்படையில் இந்த சுற்றுக்கு முன்னேறுவது டெல்லியா அல்லது மும்பையா? என்பது இறுதி செய்யப்படும். முந்தைய ஆட்டங்களில் பிளே ஆஃப் சுற்றுகளில் சில வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றி உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் பிளே ஆஃப் சுற்றில் 3 முறை அரைசதம் அடித்துள்ளார். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் ஸ்மித், மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3 முறை அரை சதம் கடந்துள்ளனர்.
இதேபோன்று ஷேன் வாட்சன், கேன் வில்லியம்சன், டு பிளெசிஸ், ஜாஸ் பட்லர், மைக்கேல் ஹசி, படினார் உள்ளிட்ட வீரர்களும் இரண்டு முறை அரை சதம் கடந்துள்ளார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத், லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.
இதற்கிடையே வரும் வெள்ளியன்று பெங்களூரு மைதானத்தில் நடைபெறவிருந்த ஆர்.சி.பி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.


