Last Updated:
தோனி, ரிஷப் பந்த் கிடையாது.. உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான்.. முன்னாள் கேப்டன் கருத்து
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.
இந்தக் கேள்விக்கான பதிலில் அவர் ரிஷப் பந்த் மற்றும் எம்.எஸ். தோனியை தவிர்த்து விட்டு மற்றொரு முன்னாள் வீரரை குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்காக முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் கிர்மானியும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் முன்னாள் கேப்டன் அசாருதீன் தனது சுயசரிதை வெளியிட்டு விழாவில் கிர்மானி குறித்து பாராட்டி பேசினார்.
அவர் உலகின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் என்றும் இதுவரைக்கும் இப்படி ஒரு விக்கெட் கீப்பர் பிறந்ததில்லை என்று கூறிய அசாருதீன், 1983 உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்றிய விதம் பிரம்மிக்கத்தக்கது என்று தெரிவித்தார். இதேபோன்று கபில்தேவ் 175 ரன்கள் எடுத்த போட்டியில் அவருக்கு கிர்மானி 24 ரன்கள் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார் என்று அசாருதீன் பாராட்டி பேசி உள்ளார்.
சையத் கிர்மானி ஜனவரி 1976 முதல் ஜனவரி 1986 வரை இந்திய அணிக்காக மொத்தம் 88 டெஸ்ட் மற்றும் 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 2759 மற்றும் 373 ரன்கள் எடுத்தார்.
August 11, 2025 9:02 PM IST


