Last Updated:
மும்பையில் உள்ள இடத்தை பச்சன் குடும்பத்தினர் 15 ஆண்டுகளுக்கு பாரத ஸ்டேட் வங்கிக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தங்களது பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் தோனிக்கு 6 கோடி ரூபாயையும், நிலத்தை குத்தகைக்கு வழங்கிய பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு சுமார் 18 லட்சம் ரூபாயையும் வழங்கியுள்ளது.
தங்களது பிராண்ட் மற்றும் விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கொண்டு செல்லும் வகையில், பிரபல நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை நிறுவனங்கள் பிராண்ட் தூதராக நியமித்து வருகின்றன.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணி வீரருமான தோனியை, கடந்த 2023ஆம் ஆண்டு தங்களது பிராண்ட் தூதராக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது. இந்நிலையில், பிராண்ட் தூதருக்கான ஒப்பந்தப்படி தோனிக்கு 6 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
அதேபோல, மும்பையில் உள்ள இடத்தை பச்சன் குடும்பத்தினர் 15 ஆண்டுகளுக்கு பாரத ஸ்டேட் வங்கிக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். அதற்காக மாதந்தோறும் 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை அபிஷேக் பச்சனுக்கு SBI வழங்கி வருகிறது.
இந்தியாவின் முன்னணி வங்கியாகவும் அதிக நம்பிக்கை தன்மை கொண்ட வங்கியாகவும் பாரத ஸ்டேட் இருந்து வருகிறது. இந்த வங்கிக்கு எம்.எஸ். தோனி பிராண்ட் அம்பாசிடராக இருப்பதன் மூலம் வங்கியின் நம்பக தன்மை மேலும் அதிகரிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய கமர்சியல் வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. இதேபோன்று மும்பையில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கிக்கு பிரபல நடிகர் அமிதாப் பச்சன் இடம் வழங்கியுள்ளார். 3150 சதுர அடி அளவில் மும்பையில் பாரத ஸ்டேட் வங்கி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தற்போது மாத வாடகையாக சுமார் 18 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 15 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு பின்னர் இந்த வாடகை 23.6 லட்ச ரூபாயாகவும், அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 29.5 லட்ச ரூபாயாகவும் வாடகையாக பாரத ஸ்டேட் வங்கி அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கு செலுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
February 21, 2025 9:56 PM IST
ஸ்டேட் வங்கியின் பிராண்ட் அம்பாசிடர்.. தோனிக்கு வழங்கப்பட்டது எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?


