கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனாக இருப்பது அணியை வழிநடத்துவது மற்றும் அணிக்கு கோப்பைகளை வென்று தருவதே ஆகும். அதனால் தான் கங்குலி, டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கேப்டன்கள் இந்திய அணியில் இருந்தாலும் ஐசிசி கோப்பையை வென்ற கபில்தேவ், தோனி மற்றும் ரோஹித் சர்மாவை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வகையில் ஐசிசி கோப்பைகளை அதிகம் வென்ற கேப்டன்கள் யார், யார் என்பதை தற்போது பார்க்கலாம்.


