• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோனி செய்த தவறும்… வீணான 9 பந்துகளும்… | தொடர்ந்து 2-வது முறை​யாக லீக் சுற்றுடன் மூட்டைகட்டியது சிஎஸ்கே | Dhoni s mistake csk wasted 9 balls knocked out of ipl 2025

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தோனி செய்த தவறும்… வீணான 9 பந்துகளும்… | தொடர்ந்து 2-வது முறை​யாக லீக் சுற்றுடன் மூட்டைகட்டியது சிஎஸ்கே | Dhoni s mistake csk wasted 9 balls knocked out of ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​துள்​ளது சிஎஸ்கே அணி. கடந்த சீசனிலா​வது கடைசி லீக் ஆட்​டம் வரை தொடரை உயிர்ப்​பிப்​புடன் வைத்​திருந்​தது சிஎஸ்கே அணி. ஆனால் இம்​முறை இன்​னும் 4 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்ள நிலை​யில் இப்​போது மூட்​டைகட்​டி​யுள்​ளது. இந்த சீசனில் சிஎஸ்​கேவுக்கு நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் முடிவுரை எழு​தி​யது பஞ்​சாப் கிங்ஸ் அணி​தான்.

ஐபிஎல் வரலாற்​றில் அந்த அணி இது​போன்ற நெருக்​கடி​யான நிலையை சந்​திப்​பது இதுவே முதன்​முறை​யாகும். ஒட்​டுமொத்​த​மாக 18 சீசன்​களில் சிஎஸ்கே அணி லீக் சுற்​றுடன் வெளி​யேறு​வது இது 4-வது முறை​யாகும். 2020, 2022, 2024-ம் ஆண்​டு​களி​லும் அந்த அணி லீக் சுற்றை கடக்​க​வில்​லை.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தனது கோட்​டை​யான சேப்​பாக்​கம் மைதானத்​தில் வெற்​றிக்​கான தாகத்​துடன் விளை​யா​டாதது பெரிய பின்னடைவை ஏற்​படுத்​தி​யது. இங்கு விளை​யாடி உள்ள 6 ஆட்​டங்​களில் 5-ல் தோல்​வியை சந்​தித்​த​தால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பறிகொடுத்துள்​ளது.

பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஒரே ஒரு நேர்​மை​யான விஷ​யம் என்​றால் அது சேம்கரணின் மட்டை வீச்சு மட்​டுமே. அவரது அபாரமான பேட்​டிங் காரண​மாகவே சிஎஸ்கே 190 ரன்​னை எட்ட முடிந்​தது. ஆனால் இந்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 220 ரன்​கவரை எடுப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள் இருந்​தது.

இவற்றை முதலில் நீர்த்​துப்போவதற்கு தோனியே வழி​வகுத்து கொடுத்​தார். 18 ஓவர்​களில் சிஎஸ்கே 177 ரன்​கள் குவித்து வலு​வாக இருந்​தது. ஆனால் அடுத்த ஓவரை வீசிய யுவேந்​திர சாஹல் ஆட்​டத்தை புரட்​டிப் போட்​டார். முதல் பந்து வைடாக வீசி​னார். இதற்கு மாற்று பந்தை மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசி தோனி சிக்​ஸர் பறக்​க​விட்​டார். ஆனால் அடுத்த பந்தை சாஹல் ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே வீச தோனி அதை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் கேட்ச் ஆனது.

இங்​கு​தான் தோனி தவறு செய்​தார். எப்​போது பேட்​டிங்​கில் சரி​யான கணக்​கீடு செய்து விளை​யாடும் தோனி, சுழற்​பந்து வீச்​சில் பெரிய அளவில் தாக்​குதல் ஆட்​டம் தொடுப்​பவர் கிடை​யாது. முதல் பந்​தில் சிக்​ஸர் அடித்த அவர், அடுத்த பந்​தில் நிதானம் காட்​டி, சுழற்​பந்து வீச்​சில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​ளும் திறன் கொண்ட ஷிவம் துபேவுக்கு ஸ்டிரைக்கை கொடுத்​திருக்க வேண்​டும்.

ஆனால் அதை தோனி செய்​யத் தவறிய​தால் அந்த ஓவரில் யுவேந்​திர சாஹல் ஹாட்​ரிக் உட்பட 4 விக்​கெட்​களை கைப்​பற்றி சிஎஸ்​கே​வின் ரன் வேட்​டையை முடக்​கி​னார். அர்​ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஷிவம் துபே, நெருக்​கடி காரண​மாக தவறான ஷாட் விளை​யாடி அடுத்த பந்​தில் விக்​கெட்டை பறி​கொடுக்க சிஎஸ்கே அணி 190 ரன்​களுக்​குள் முடங்​கியது.

கடைசி 7 பந்​துகளில் 5 விக்​கெட்​களை தாரை​வார்த்​தது சிஎஸ்கே அணி. விக்​கெட்​கள் வீழ்ந்த இந்த 5 பந்​துகளும், 19.2 ஓவர்​களி​லேயே ஆட்டமிழந்ததால் அதில் எஞ்​சிய 4 பந்​துகளும் என முழு​மை​யாக 9 பந்​துகளை சிஎஸ்கே கோட்​டை​விட்​டது. ஒரு​வேளை தோனி ஆட்​ட​மிழக்​காமல் இருந்து இந்த 9 பந்​துகளை​யும் சிஎஸ்கே விளை​யாடி இருந்​தால் நிச்​ச​யம் கூடு​தலாக 15 முதல் 20 ரன்​களை சேர்த்​திருக்க முடி​யும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்​லாமல் போனது.

191 ரன்​கள் சிறப்​பான இலக்​கு​தான். ஆனால் பஞ்​சாப் கிங்ஸ் அணி அதை எந்​த​வித சிர​மும் இன்றி ஸ்ரேயஸ் ஐயர் (72), பிரப்​சிம்​ரன் சிங் (54)

ஆகியோரது தாக்​குதல் ஆட்​டத்​தால் எளி​தாக அடைந்​தது. பஞ்​சாப் அணி ஓவருக்கு சராசரி​யாக 9 ரன்​களுக்கு மேல் சீராக எடுத்​தது. வழக்​கம் போன்று எந்​த​வித தாக்​க​மும் இல்​லாத சிஎஸ்​கே​வின் பந்​து​வீச்​சும், தீவிரம் இல்​லாத பீல்​டிங்​கும் பஞ்​சாப் அணி​யின் துரத்​தலை எளி​தாக்​கியது. ரவீந்திர ஜடேஜா வீசிய 8-வது ஓவரின் 2-வது பந்தை ஸ்ரேயஸ் ஐயர் ஸ்வீப் ஷாட்​டில் பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசையை நோக்கி தூக்கி அடித்தார். அந்த பகு​தி​யில் ஷிவம் துபே பீல்​டிங் செய்த நிலை​யில் மிக நெருக்​க​மாக எல்​லைக்​கோட்டு பகு​தியை நோக்கி பாய்ந்த பந்தை ஷிவம் துபே கேட்ச் செய்ய எந்​த​வித முயற்​சி​யும் எடுக்​க​வில்​லை. மேலும் நூர் அகமது வீசிய 13-வது ஓவரில் பிரப்​சிம்​ரன் கொடுத்த எளி​தான கேட்ச்சை பதிரனா தவற​விட்​டார். எனினும் அதன் பின்​னர் பிரப்​சிம்​ரன் அதி​கம் நேரம் களத்​தில் நிற்​க​வில்​லை.

இதன் பின்​னர் களமிறங்​கிய ஷசாங் சிங்​கும் தாக்​குல் ஆட்டம் மேற்​கொண்​டார். கடைசி 4 ஓவர்​களில் 41 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் மதீஷா பதிரனா வீசிய 17-வது ஓவரில் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியை விளாசி ஸ்ரேயஸ் ஐயர் மிரட்​டி​னார். பதிர​னா​வின் வேகத்தை சரி​யாக பயன்​படுத்தி ஸ்ரேயஸ் ஐயர் விளாசிய 2 சிக்​ஸர்​கள் அனை​வரை​யும் கவர்ந்​தது.

இந்த ஓவரில் பதிரனா தாரை​வார்த்த 17 ரன்​கள் பஞ்​சாப் அணி​யின் வெற்​றியை எளி​தாக்​கியது. ஏனெனில் கடைசி 3 ஓவர்​களில் வெற்​றிக்கு 21 ரன்களே தேவை என்ற நிலை உரு​வானது. ஜடேஜா​வின் அடுத்த ஓவரில் பவுண்​டரி, சிக்​ஸர் விளாசிய ஷசாங் சிங் 3-வது பந்தை சிக்​ஸருக்கு தூக்கி அடித்த போது எல்​லைக்​கோட்​டில் டெவால்ட் பிரே​விஸ் சாகசத்​துடன் கேட்ச் செய்​தார். 19-வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயரை, பதிரனா போல்டாக்கினார். ஆனால் ஆட்​டம் அப்​போது சிஎஸ்​கே​வின் கைகளில் இல்​லை. சிஎஸ்​கே​வின் சுழலுக்கு எதி​ராக 7 ஓவர்​களில் பஞ்​சாப் அணி 71 ரன்​களை குவித்து மிரட்​டியது.

சிஎஸ்கே அணி 10 ஆட்​டங்​களில் 8-வது தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்​துள்​ளது. சிஎஸ்​கேவுக்கு இன்​னும் 4 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்​ளது. இதில் அணி​யில் மற்ற உள்ள இளம் வீரர்​களின் திறமையைப் பரிசோ​தித்​துக் கொள்​ளலாம். மேலும் கவுர​வ​மான வெற்​றிகளு​டன் தொடரை நிறைவு செய்ய முயற்​சிக்​கலாம். சிஎஸ்கே இதற்கு முன்​னர் பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற முடி​யாமல் வெளி​யேறிய 3 முறை​யும் போ​ராட்ட குணம் இருந்​தது. ஆனால் இம்​முறை அதை அரிதாககூட பார்க்க முடிய​வில்​லை. வெற்​றிக்​கான வேட்​கையோ, தாக​மும் இல்​லாமல் போனது. இங்​கிருந்​து அடுத்​த சீசனுக்​கான அணி​யை கட்டமைப்​ப​தி​லும்​ சிஎஸ்​கே அணிக்​கு பெரும்​ சவால்​ காத்​திருக்​கிறது என்​பது நிதர்​சனம்​.



Read More

Previous Post

கிக் தொழிலாளர்கள் நலவாரியம் முதல் மேதின விடுமுறை வரை! தொழிலாளர்கள் குறித்து லிஸ்ட் போட்ட ஸ்டாலின்!

Next Post

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்​சம் கோடி: இதுவரை இல்லாத அதிகபட்சம் | GST collections in April 2025 hit record high

Next Post
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்​சம் கோடி: இதுவரை இல்லாத அதிகபட்சம் | GST collections in April 2025 hit record high

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்​சம் கோடி: இதுவரை இல்லாத அதிகபட்சம் | GST collections in April 2025 hit record high

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin