• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“தோனி கேப்டனாக இருந்தபோது 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்தது…” – யுவராஜ் சிங்கின் தந்தை குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“தோனி கேப்டனாக இருந்தபோது 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்தது…” – யுவராஜ் சிங்கின் தந்தை குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 16, 2025 1:00 PM IST

யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், தோனி கேப்டனாக இருந்தபோது 7 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

யோக்ராஜ் சிங் - எம்.எஸ்.தோனியோக்ராஜ் சிங் - எம்.எஸ்.தோனி
யோக்ராஜ் சிங் – எம்.எஸ்.தோனி

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்பட்டது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றத்தில் பல முக்கிய வீரர்கள் வெளியேறினார்கள் (வெளியேற்றப்பட்டார்கள்?). மேலும், அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி நீக்கப்படுவார் என்று அன்றைய பிசிசிஐ தேர்வுக்குழுவில் இருந்த மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, “நீங்கள் (பிசிசிஐ தேர்வுக்குழு) கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லக்‌ஷ்மன், ராகுல் டிராவிட் ஆகிய வீரர்களை 2011 உலகக்கோப்பை முடிந்தபிறகு அனுப்பிவிட்டீர்கள்.

2011 உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்திய அணியை அழித்துவிட்டீர்கள். அந்த 7 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை சாக்கடையில் வீசிவிட்டீர்கள். அதனால் தான் இந்திய அணி அப்போது தடுமாறியது. தோனி கேப்டனாக இருந்தபோது 5 தொடர்களில் நாம் தோல்வியடைந்தோம். அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்தார்” என யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2011 உலகக்கோப்பை தொடரில் முக்கிய வீரர்களாக இருந்த கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன், என எந்த வீரரும் 2015 உலகக்கோப்பை தொடரில் இல்லை. இதையடுத்து, டெஸ்ட் தொடரில் 2014ஆம் ஆண்டு வரையும், ஒருநாள் தொடரில் 2017ஆம் ஆண்டு வரையும், தோனி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Mumbai,Maharashtra

First Published :

June 16, 2025 1:00 PM IST

Read More

Previous Post

அகமதாபாத் விமான விபத்து: மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நாளை ஆலோசனை | Ahmedabad plane crash – High-level committee headed by Union Home Secretary to meet tomorrow

Next Post

டெல்லி, மும்பை அல்ல.. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நகரத்தில் 79% வீட்டு விலை உயர்வு..!

Next Post
டெல்லி, மும்பை அல்ல.. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நகரத்தில் 79% வீட்டு விலை உயர்வு..!

டெல்லி, மும்பை அல்ல.. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நகரத்தில் 79% வீட்டு விலை உயர்வு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin