Last Updated:
தோனியுடன் எல்லா நேரங்களிலும் தொடர்பில் இருப்பதாக கூறிய சூரிய குமார் யாதவ், எதிரணியில் அவருக்கு எதிராக கேப்டனாக விளையாடுவது சவாலானது என்று தெரிவித்தார்.
தோனிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக எதிர்கொள்வது சவாலானது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சூரிய குமார் தெரிவித்துள்ளார். சென்னை அணியின் அன் கேப்டு ஆட்டக்காரரான தோனியை கட்டுப்படுத்த திட்டங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு சுவாரசியமான பதிலை அளித்தார் சூர்ய குமார் யாதவ்.
ஐபிஎல் திருவிழா கோலாகமாக தொடங்கிய நிலையில், 2ஆவது நாள் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, சென்னை அணியுடன் முதல் லீக் போட்டியில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாக மும்பை அணியின் கேப்டன் சூரிய குமார் கூறினார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் பாண்ட்யா, பும்ரா விளையாடாத நிலையில், அவர்கள் இடத்தை மற்ற பந்துவீச்சாளர்கள் நிரப்புவர்கள் என்று கூறினார்.
சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறிய சூரிய குமார், தொடக்க போட்டியில் வெற்றி என்பது முக்கியமானது என்றார்.
தோனியுடன் எல்லா நேரங்களிலும் தொடர்பில் இருப்பதாக கூறிய சூரிய குமார் யாதவ், எதிரணியில் அவருக்கு எதிராக கேப்டனாக விளையாடுவது சவாலானது என்று தெரிவித்தார்.
சூர்ய குமாரிடம், சென்னை அணியின் அன் கேப்டு ஆட்டக்காரர் தோனியை கட்டுப்படுத்த வியூகம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தவாறே பதில் அளித்த சூர்யகுமார், முந்தைய சீசன்களில் தோனியை யாராவது கட்டுப்பாட்டில் வைத்தார்களா? என்று கிண்டலாக பதில் கேள்வி கேட்டார்.
ஐபிஎல் தொடரில் வலுவான அணிகளாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 22, 2025 10:20 PM IST


