தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக PIB தெளிவுபடுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவத்திற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ.7 நாணயத்தை வெளியிட உள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் படத்துடன் கூடிய நாணயம் வெளியிடப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த தகவல் தவறானது என்பதை Press Information Bureau(PIB) தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் வைரலான அந்த படத்தைப் பகிர்ந்து PIB தெளிவுபடுத்தியுள்ளது. அது என்னவென்றால், தோனியை கவுரவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ரூ.7 நாணயத்தை வெளியிட உள்ளதாக பரவிய தகவல் போலியானது என்றும், பொருளாதார விவகாரங்கள் துறை இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது. ஆனால், இந்த போலியான செய்தி ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானதால், இதை நம்பி, தோனி ரசிகர்களும் நெட்டிசன்களும் அந்த படத்தை பகிர்ந்து வருகின்றர்.
Also Read:
மணிப்பூர்: கடத்திச் செல்லப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்பு… மீண்டும் பதட்டமான சூழல்!
இந்நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புவதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இந்த நிகழ்வு உண்மை சரிபார்ப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம், சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள் குறித்த உண்மையை கண்டறிய முடியும்.
விழிப்புடன் இருங்கள்!
இதுபோன்ற தகவல்களை பகிர்வதற்கு முன், அவற்றை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்புவது குழப்பத்தையும் தேவையற்ற பீதியையும் ஏற்படுத்தும். ஆகையால், இதுபோன்று பரவும் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த PIB மற்றும் உண்மை சரிபார்ப்பு தளங்கள் போன்ற நம்பகமான தளங்களில் ஆராய வேண்டும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
