2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு பெரும் ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்துக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. தக்கவைக்கப்பட்ட வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ-யிடம் அந்தந்த அணிகள் அளித்துள்ளன. வரும் பிப்.18-ம் திகதி சென்னையில் ஏலம் நடைபெற உள்ளது.
2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு பெரும் ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் மார்னஸ் லபுஷேன் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது குறித்து தனது ஆர்வத்தை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அவரை எந்தெந்த ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே, 2020 சீசனில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறியது.
இதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் சொதப்பல் மிடில் ஆர்டர் தான். வாட்சனும் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வுப் பெற்றிருப்பதால், தோனியின் பார்வை லபுஷேன் மீது விழ வாய்ப்புள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இதே பிரச்சனை தான். மிடில் ஆர்டரில் சென்னைக்கு நிகராக ‘நீயா நானா’ மோடில் மிடில் ஆர்டரில் திணறியது.
இதனாலேயே அதிரடி வீரர் மேக்ஸ்வெல் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். ஸோ, மேக்ஸ்வெல்-க்கு பதில் லபுஷேன் எடுக்கப்படலாம்.
ராஜஸ்தான் அணி, அதன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தையே கழட்டிவிட்டது. காரணம், அவரது தொகை 12.5 கொடி என்பதால். 2008ல் கோப்பையை வென்ற பிறகு, இதுவரை ஒரு துரும்பை கூட அவர்கள் கிள்ளி போடவில்லை.
பெரும் அதிருப்தியில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம், ஏலத்தின் போது மீண்டும் ஸ்மித்தை குறைந்த விலைக்கு எடுக்க முயற்சிக்கலாம். ஒருவேளை ஸ்மித் மிஸ் ஆகும் பட்சத்தில் லபுஷேனை அவர்கள் எடுக்கலாம்.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள கல் விட்டெறிந்துள்ளேன். என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம். ஐபிஎல் என்பது மிகப்பெரிய தொடர்.
தனிப்பட்ட முறையில், அதில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இருக்கிறது என்று லபுஷேன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.