Last Updated:
16 ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி, என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று, தனது கடைசி போட்டியில் விளையாடுகிறது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை அணியைப் பொறுத்தவரையில், புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. அடுத்த சீசனை கவனத்தில் கொண்டு, அணியை கட்டமைப்பதற்கு இப்போட்டியை அந்த அணி பயன்படுத்தும் எனத் தெரிகிறது.
16 ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி, என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஒருவேளை தோனி இந்த ஐபிஎல் சீசனுடன் தனது ஓய்வை அறிவித்தால், தோனியின் கடைசி போட்டியாக இது இருக்கும்.
அதேநேரத்தில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி, இந்தப் போட்டியில் வெற்றிபெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ய விரும்பும்.
200 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ள இந்த மைதானத்தில்தான், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில், சென்னைக்கு எதிராக குஜராத் அணி தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.


