Last Updated:
Virender Sehwag’s Big Reveal: வீரேந்திர சேவாக் 2011 உலகக் கோப்பைக்கு முன் தோனியின் அழுத்தத்தால் ஓய்வு பெற நினைத்தாகவும் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையால் முடிவை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பே தோனியின் அழுத்தத்தால் ஓய்வு பெற நினைத்ததாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக இருந்த வீரேந்திர சேவாக், கடந்த 2013-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் கேப்டன் தோனி தன்னை அணியிலிருந்து நீக்கியதாகவும் இதனால் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற முடிவெடுத்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து ஓய்வு முடிவு குறித்து ஆலோசிக்கும் போது தானும் இதுபோன்ற நிலையை கடந்துவந்துள்ளதாகவும் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என அறிவுரை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிய ஓய்விற்கு பிறகு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்றிரண்டு தொடர்களில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 2011 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் பின்னர் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்ததாகவும் சேவாக் மனம்திறந்துள்ளார்.
Delhi,Delhi,Delhi
August 15, 2025 5:26 PM IST


