Last Updated:
அவர் ஆண்ட்ரியா என்ற பிரபல மாடலைக் காதலித்து திருமணம் முடித்தார். சுமார் ஆறு ஆண்டுகள் இருவரும் டேட்டிங்கில் இருந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி குறித்த பல்வேறு தகவல்கள் சமீபகாலமாக ஊடகங்களில் வெளிவருகின்றன. தவறான பழக்கவழக்கங்களால் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளி சமீபத்தில்தான் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பதால் வினோத் காம்ப்ளி குறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டன. இருப்பினும் தனது தவறான பழக்கவழக்கங்களால் சச்சின் உடைய நட்பை வினோத் காம்ப்ளி இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சர்ச்சை நாயகனாக வினோத் காம்ப்ளி வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் ஆண்ட்ரியா என்ற பிரபல மாடலைக் காதலித்து திருமணம் முடித்தார். சுமார் ஆறு ஆண்டுகள் இருவரும் டேட்டிங்கில் இருந்த நிலையில் வினோத் காம்ப்ளியும் ஆண்ட்ரியாவும் திருமணம் முடித்துக் கொண்டனர்.
ஒருமுறை தனது கணவர் வினோத் காம்ப்ளிக்கு எதிராக ஆண்ட்ரியா காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது அந்த சம்பவம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதாவது, ஒருமுறை வினோத் காம்ப்ளி நன்றாகக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட தகராறில் தோசைக்கல்லை வைத்து ஆண்ட்ரியாவைக் காம்ப்ளி தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கு அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று ஆண்ட்ரியா சிகிச்சை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்த மும்பை பாந்த்ரா போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மனைவியை வினோத் காம்ப்ளி தாக்கிக்கொண்டிருந்தபோது, அதனை அவரது மகன் நேரில் பார்த்துள்ளார். அவர் தடுக்க முயன்றபோதும், மனைவியைத் தொடர்ந்து தாக்கியுள்ளார் வினோத் காம்ப்ளி. மேலும், தனது மகனையும் காம்ப்ளி ஆபாசமாகப் பேசியதாக ஆண்ட்ரியா குற்றம் சாட்டியிருந்தார்.
June 26, 2025 4:07 PM IST


