

கோலாலம்பூர்:
இத்தனை விபத்துகளும், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த யுகத்தில் நடப்பது மிகவும் கவலைக்கிடமானது. AI, ஆட்டோமேஷன், பாதுகாப்பு சென்சார்கள் போன்ற நவீன வசதிகள் இருந்தும், பாதுகாப்பில் அலட்சியம், முறையான பராமரிப்பின்மை, மற்றும் முன்னேச்சரிக்கை இல்லாமை காரணமாக இவைகள் நடக்கின்றன.
பயணிகள் விமானத்தில் ஏறும்போது “எனக்கு பாதுகாப்பு உண்டா?” என்ற பதட்டத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது வேதனைக்குரியது.
இன்றைய நிலையில், பாதுகாப்பு என்பது விருப்பமல்ல, அது கடமையாக இருக்க வேண்டும். விமான நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் உலகளாவிய விமான அமைப்புகள் இந்த விபத்துகளை சீராய்ந்து, உண்மையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. மனித உயிர் ஒரு எண்ணிக்கையாக அல்ல , அது ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்! யூன் மற்றும் யூலையில் நடந்த முக்கிய விமான விபத்துகள் இதோ!
1. இந்தியாவில், அஹமதாபாத் அருகே ஏர் இந்தியா ஃப்ளைட் 171 விமானம் தரையிறங்கியபோது கட்டிடத்தில் மோதியது. இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் மேலும் காயமடைந்தனர்.
2. இந்தியா உத்தரகண்டில் கடுமையான வானிலை காரணமாக ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர், இதில் 23 மாத குழந்தை மற்றும் 10 வயது சிறுமி உட்பட இருந்தனர்.
3.பிரேசிலில் ஜூன் 21 அன்று ஹாட் ஏர் பாலூனில் தீப்பிடித்து 8 பேர் உயிரிழந்தனர்.
4.நேற்று ஜூலை 21 அன்று டாக்காவில் F‑7 BGI பயிற்சி விமானம் Milestone பள்ளிக்கூட வளாகத்தில் விழுந்தது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் மாணவர்கள் மற்றும் 1 பைலட். மேலும் 171 பேர் காயமடைந்தனர்.
5. ஜூலை 13 அன்று Zeusch Aviation Flight 1 எடுத்துப் புறப்பட்ட உடனே தீயில் engulf ஆகி விழுந்து, 4 பேர் பலியானனர்.
6. ஜூலை 18 அன்று Charleston விமான நிலையத்தில் Breeze A220 மற்றும் ANA Boeing 787‑10 இடையே தரையிட மோசடி நேர்ந்தது. இதில் 2 பயணிகள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
7. ஒரு Delta Connection (SkyWest E175) விமானம் U.S. Air Force B‑52 போர் விமானத்தை மோதியது. பயணிகள் பாதிக்கப்படவில்லை எனினும் விபத்து பயங்கரத்தை உண்டுபண்ணியது.
8. ஜூலை 15 அன்று British Airways மற்றும் easyJet விமானங்களில் அடுத்தடுத்து அவசர நிலைகள் ஏற்பட்டன. British Airways–ல் துரதிஷ்டவசமாக toxic fumes பிரச்சினை, easyJet–ல் பறவைகள் தாக்குதல் (bird strike) காரணமாக இடைநிறுத்தப்பட்டன. பயணிகள் மருத்துவ கவனிப்பில் வைக்கப்பட்டனர்.
9. ஜூலை 21 அன்று Air India A320 இயல்பான monsoon மதியமழையில் runway 27-ல் தரையிறங்கும்போது 3 டயர்கள் வெடித்து runway‑விலிருந்து விலகியது. பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர்.
10. ஜூலை 2 அன்று Ugandan Mi‑24 ஹெலிகாப்டர் Mogadishu இறங்க முயன்ற போது நாசமடைந்தது. இதில் 5 பேர் பலியானனர், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
11. ஜூலை 1 அன்று ஒரு Su‑34 பயிற்சி விமானம் Nizhny Novgorod Oblast இல் mechanical கோளாறு காரணமாக விழுந்தது; குழுவினர் eject செய்து உயிர் தப்பினர்.
12. ஜூலை 5‑6 அன்று Madrid–NYC Delta A330 விமானம் engine trouble காரணமாக Terceira தீவுக்கு அவசர தரையிறங்கைச் செய்தது; பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் விபத்து வைரலாக பேசப்பட்டது.



