பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா உடனான வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றுள்ளதால், கீர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்பட இந்தியாவுடன் புதிய கூட்டாண்மையை விரும்புவதாக ஏற்கெனவே தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நிலையை உலகளவில் பிரதிபலிக்கும் வகையில், கடந்த மாதம் ஸ்டார்மர் இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்க ஒரு வாய்ப்புள்ளது என்று கூறினார்.
“இது நாடுகளின் வரலாறு நம்முடையதைப் போலவே, பின்னிப் பிணைந்திருக்கும்போது, அதில் ஒரு நீண்ட நிழல் இருக்கும். ஆனால், இன்றைய இந்தியாவின் மீது அந்த நிழலை நான் பார்க்கவில்லை. இந்தியா தற்போது நவீன இந்தியா, எதிர்கால இந்தியா” என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:
பிரிட்டன் தேர்தல் 2024 : ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி… பிரதமராகும் கெர் ஸ்டார்மர்!
கடந்த காலங்களில் தொழிலாளர் கட்சிக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு குறித்து பதிலளித்த ஸ்டார்மர், “தொழிலாளர் கட்சியில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் எங்கள் கட்சியை மாற்றுவதற்கான முடிவை வெளிப்படையாக எடுத்துள்ளோம்” என்று கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
